WTC : டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் கே.எல் ராகுலுக்கு பதில் இவரே விளையாடனும் – ரவி சாஸ்திரி கருத்து

Ravi-Shastri
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நடத்தும் இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை தொடரின் இறுதி போட்டியானது வரும் ஜூன் 7-ம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடர்களின் முடிவுகளின் அடிப்படையில் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டியில் விளையாட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

IND vs AUS

- Advertisement -

இந்த இறுதிப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை ஏற்கனவே அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்த வேளையில் இந்திய அணியும் அண்மையில் டெஸ்ட் சாம்பியன் தொடரின் இறுதி போட்டிக்கான அணியை அறிவித்திருந்தது.

அதில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனட்கட் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களாக யார் வருவார்கள் என்ற கேள்வி அதிகம் இருந்தது. இந்நிலையில் கே.எல் ராகுலுக்கு பதிலாக இந்திய அணியில் இஷான் கிஷனை இணைத்துள்ளதாக இந்திய அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

KS Bharat 1

அதோடு கூடுதலாக ஸ்டான்ட் பை வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோரை அறிவித்துள்ளனர். இந்நிலையில் கே.எல் ராகுலுக்கு பதிலாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாட கே.எஸ் பரத் தகுதியானவர் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : தற்போதுள்ள இந்திய அணியில் முதன்மை விக்கெட் கீப்பராக கே.எஸ் பரத் இடம்பிடித்திருக்கிறார். எனவே எந்தவொரு தயக்கமும் இன்றி அவரை இறுதிப்போட்டியில் விளையாட வைக்கவேண்டும். அதேபோன்று தற்போதைய பார்மின் அடிப்படையிலும் அவரை விளையாட வைப்பது தான் சிறந்தது.

இதையும் படிங்க : IPL 2023 : உங்க தவறான முடிவு தான் கையிலிருந்த லக்னோவின் வெற்றி பறிபோக காரணம் – கம்பீரை விளாசிய சேவாக், நடந்தது என்ன

கே.எஸ் பரத் நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். அவரால் இங்கிலாந்து சூழ்நிலைகளில் மிகச் சிறப்பாக செயல்பட முடியும். இந்திய அணி இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் செல்லும் பட்சத்தில் நிச்சயம் அவர் சரியான ஒரு தேர்வாக இருப்பார். ஏனெனில் அவர் உள்ளூர் தொடர்களிலும் சரி, இந்திய அணியுடன் பயணித்த தருணங்களிலும் சரி கீப்பிங்கில் அவரது முன்னேற்றத்தை காண்பித்துள்ளார் என ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement