IPL 2023 : உங்க தவறான முடிவு தான் கையிலிருந்த லக்னோவின் வெற்றி பறிபோக காரணம் – கம்பீரை விளாசிய சேவாக், நடந்தது என்ன

- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 7ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெற்ற 51வது லீக் போட்டியில் லக்னோவை 56 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த குஜராத் 8வது வெற்றியை பதிவு செய்து பிளே ஆப் சுற்று வாய்ப்பை 90% உறுதி செய்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 227 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரிதிமான் சஹா 81 (43) சுப்மன் கில் 94* (15) கேப்டன் பாண்டியா 25 (15) என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை எடுத்தனர்.

அதை தொடர்ந்து 228 ரன்களை துரத்திய லக்னோவுக்கு கெய்ல் மேயர்ஸ் – குயிண்டன் டீ காக் ஆகிய ஓப்பனிங் ஜோடி அதிரடியாக விளையாடி 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கான நல்ல அடித்தளத்தை கொடுத்தது. அதில் கெய்ல் மேயர்ஸ் 48 (32) ரன்களை விளாசி அவுட்டான போதிலும் 10 ஓவரில் 102/1 ரன்கள் எடுத்திருந்த லக்னோ எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே இந்த சீசனில் ஆரம்பம் முதலே திண்டாடி வரும் தீபக் ஹூடா அந்த சமயத்தில் களமிறங்கி 11 (11) ரன்களை எடுத்து அழுத்தத்தை உண்டாக்கி ஷமியின் வேகத்தில் ஆட்டமிருந்தார்.

- Advertisement -

சேவாக் விளாசல்:
அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் அடுத்து வந்த மார்கஸ் ஸ்டோனிஸ் தடுமாறி 4 (9) ரன்களில் அவுட்டான நிலையில் மறுபுறம் அதிரடியாக செயல்பட்ட டீ காக் 70 (41) ரன்களில் ரசித் கான் சுழலில் முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து வந்த நிக்கோலஸ் பூரான் 3 (6) ஆயுஷ் படோனி 21 (11) க்ருனால் பாண்டியா 0 (1) என முக்கிய பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் காலி செய்த குஜராத் 20 ஓவர்களில் லக்னோவை 171/7 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மோகித் சர்மா 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

ஆனால் முதல் 10 ஓவர்களில் அதிரடியாக விளையாடிய லக்னோ ஸ்டோனிஸ், பூரான் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்தும் கடைசி 10 பெட்டி பாம்பாக அடங்கி தோல்வியை சந்தித்தது அந்த அணி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் சிறந்த தொடக்கம் கிடைத்த போது ஸ்டோனிஸ், பூரான் போன்ற கடந்த போட்டிகளில் அதிரடியாக விளையாடி நல்ல பார்மில் இருக்கும் பேட்ஸ்மேன்களை விட்டுவிட்டு சுமாரான பார்மில் தவிக்கும் தீபக் ஹூடாவை 3வது இடத்தில் களமிறக்கிய கெளதம் கம்பீர் தலைமையிலான லக்னோ அணி நிர்வாகத்தின் தவறான முடிவே இந்த தோல்விக்கு காரணம் என்று முன்னாள் வீரர் சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர்கள் 10 ஓவரில் 102/1 ரன்களை எடுத்திருந்தனர். அப்படி நல்ல தொடக்கத்தை பெற்று அவர்கள் இவ்வளவு பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கக் கூடாது. குறிப்பாக முதல் விக்கெட் விழுந்ததும் நல்ல ஃபார்மில் இருக்கும் பூரான், ஸ்டோனிஸ் அல்லது க்ருனால் பாண்டியா ஆகியோரில் யாராவது ஒருவர் களமிறங்கியிருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அல்லது ஆயுஷ் படோனியாவது வந்திருக்க வேண்டும்”

“ஏனெனில் சென்னைக்கு எதிரான கடந்த போட்டியில் யார் அடித்தது? ஹூடாவா? என்னைப் பொறுத்த வரை அந்த தருணத்தில் தான் லக்னோ தோல்வியை சந்தித்து. அது லக்னோ அணியின் மிகப்பெரிய தவறான முடிவாகும். ஒருவேளை பூரான் வந்திருந்தால் கூட அவர் விளையாடும் விதத்துக்கு 20 பந்துகளில் 50 ரன்கள் எடுத்துப் போட்டியை மாற்றியிருப்பார். மாறாக அவர்களை மிச்சப்படுத்திய உங்களால் கடைசி 5 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்து வெற்றி பெற முடியாது”

இதையும் படிங்க:WTC ஃபைனலில் கேஎல் ராகுலுக்கு பதிலான மாற்று வீரரை அறிவித்த பிசிசிஐ – ருதுராஜ் உள்ளிட்ட ஸ்டேண்ட் பை வீரர்கள் இதோ

“சொல்லப்போனால் கடைசி நேரத்தில் 11 பந்துகளில் 21 ரன்கள் எடுத்த ஆயுஷ் படோனி முன்கூட்டியே வந்திருந்தால் ரன் ரேட்டை அதிரடியாக கொண்டு வந்திருப்பார். எனவே இந்த தவறான முடிவை எடுத்தது யார் கேப்டனா? பயிற்சியாளரா? அல்லது அணி நிர்வாகமா? யார் ஹூடாவை 3வது இடத்தில் அனுப்பியது? அந்த இடத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் பேட்ஸ்மேன் வந்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement