IND vs AUS : பொறுத்தது போதும், ஒய்ட் பால் மாதிரி டெஸ்ட் அணியிலும் அந்த சீனியர்களை கழற்றி விடுங்க – டிகே அதிரடி பேட்டி

Dinesh-Karthik-1
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா நடப்பு சாம்பியனாக இருப்பதால் ஆரம்பத்திலேயே கோப்பையை தக்க வைத்தது. ஆனால் இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் கொதித்தெழுந்த ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி பெற்று இந்தியாவுக்கு பதிலடி கொடுத்த தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. அதனால் கடைசி போட்டியில் வென்றால் தான் ஃபைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

KS Bharat

- Advertisement -

முன்னதாக என்ன தான் இந்தூரில் தாறுமாறாக பிட்ச் சுழன்றாலும் முதலிரண்டு போட்டிகளில் சொதப்பிய ஆஸ்திரேலியாவை போலவே மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்தியா 109, 163 என 2 இன்னிங்சிலும் 200 ரன்களுக்குள் அவுட்டானது தோல்விக்கு முக்கிய காரணமானது. சொல்லப்போனால் நாக்பூர் மற்றும் டெல்லியில் நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளிலும் விராட் கோலி, புஜாரா, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத் போன்ற பெரும்பாலான இந்திய பேட்ஸ்மேன்கள் சுமாராகவே செயல்பட்டனர். முதல் போட்டியில் சதமடித்த ரோகித் சர்மாவும் அதன் பின் சுமாராகவே செயல்பட்டு வருவது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.

கழற்றி விடுங்க:
அத்துடன் அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய 3 லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்ட காரணத்தாலேயே முதலிரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவர்கள் 3வது போட்டியில் ரன்களை குவிக்காத காரணத்தால் தோல்வி கிடைத்தது என்றே சொல்லலாம். இந்நிலையில் சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருக்கும் என்று தெரிந்தும் இத்தொடரில் சில நட்சத்திர சீனியர் இந்திய பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்த அளவுக்கு ரன்களை குவிக்கவில்லை என்று தெரிவிக்கும் தினேஷ் கார்த்திக் எத்தனை நாட்கள் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப் போகிறோம் என்பதை யோசிக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக கூறியுள்ளார்.

pujara 1

குறிப்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தம்மைப் போன்ற சீனியர்களை கழற்றி விட்டது போல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அதை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டதாக மறைமுகமாக தெரிவிக்கும் அவர் இது பற்றி க்ரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “இந்தியாவின் டாப் 7 பேட்ஸ்மேன்கள் நாம் விரும்பிய அளவுக்கு ரன்கள் எடுக்கவில்லை என்பதை நம்மால் மறக்க முடியாது. நமது பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து மடமடவென அவுட்டாவதை பற்றி பேசுகிறோம். இது போன்ற சூழ்நிலைகளில் பேட்டிங் செய்வது கடினமா என்று கேட்டால்? ஆம் நிச்சயமாக”

- Advertisement -

“ஆனால் ஒரு அணியாக இந்த மாதிரியான பிட்ச்களில் விளையாட விரும்பும் அவர்கள் இதற்கு தயாராக இருக்க வேண்டுமல்லவா? இது போன்ற கடினமான பிட்ச்களில் விளையாடும் திறமை அவர்களிடம் உள்ளது. சில நேரங்களில் சொற்ப ரன்களில் அவுட்டாகும் போது அவர்களிடம் தங்களது தன்னம்பிக்கை மீது சந்தேகம் எழுகிறது. அது கடினமான வேலை என்பதால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு என்னுடைய அனுதாபத்தை தெரிவிக்கிறேன். ஆனால் அது தான் டெஸ்ட் கிரிக்கெட்டாகும்”

DInesh Karthik Commentrator

“இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் தான் நாம் வென்றோம். மேலும் கடந்த டிசம்பரில் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வெற்றியில் அதிக பங்காற்றியுள்ளனர். இருப்பினும் நீங்கள் தோற்கும் போது அதைப்பற்றி உங்களது முகத்துக்கு நேராக பேசுவார்கள். இந்த விமர்சனங்கள் நீண்ட காலங்களாகவே இருந்து வரும் நிலையில் தேவைப்படும் ரன்களை அடிக்காத நட்சத்திர வீரர்களுக்கு எத்தனை காலம் இந்திய அணி வாய்ப்பும் ஆதரவும் கொடுக்கப் போகிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க:IPL 2023 : ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ் இல்ல – தோனிக்கு அடுத்து அவர்தான் சிஎஸ்கே கேப்டன் – கவாஸ்கர் கருத்து

அவர் கூறுவது போல இந்த தொடரில் அக்சர் பட்டேல் 185 ரன்கள் அடித்துள்ள நிலையில் விராட் கோலி (111 ரன்கள்), புஜாரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அவரை விட குறைவான ரன்களையே அடித்துள்ளனர். எனவே எவ்வளவு காலத்திற்கு விமர்சனங்களை தாண்டி சீனியர்களுக்கு ஆதரவு கொடுக்கப் போகிறோம் என்பதை யோசிக்குமாறு தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

Advertisement