IPL 2023 : ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ் இல்ல – தோனிக்கு அடுத்து அவர்தான் சிஎஸ்கே கேப்டன் – கவாஸ்கர் கருத்து

Gavaskar
- Advertisement -

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31 முதல் கோலாகலமாக துவங்குகிறது. அகமதாபாத் நகரில் துவங்கும் இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை எம்எஸ் தோனி தலைமையிலான முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் கொள்கிறது. 4 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான அணியாக ஜொலிக்கும் சென்னை கடந்த வருடம் நிறைய தோல்விகளை சந்தித்து 2020க்குப்பின் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை நழுவ விட்டு புள்ளி பட்டியலில் 9வது இடத்தை மட்டுமே பிடித்தது. எனவே இம்முறை அதிலிருந்து மீண்டெழுந்து 2021 போல சிறப்பாக செயல்பட்டு 5வது கோப்பையை சென்னை வெல்லுமா என்பதே அந்த அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

CSK MS Dhoni Ravindra Jadeja

- Advertisement -

அந்த நிலையில் 4 வருடங்கள் கழித்து சேப்பாக்கத்தில் பாதி லீக் போட்டிகளில் விளையாடுவதும் காயமடைந்த ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹர் ஆகியோர் முழுமையாக குணமடைந்துள்ளதும் சென்னை அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. முன்னதாக 39 வயதை கடந்து விட்ட காரணத்தால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு புதிய கேப்டனை உருவாக்குவதற்காக கடந்த வருடம் தம்முடைய கேப்டன்ஷிப் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்த தோனி அவரது தலைமையில் அவருக்கு உறுதுணையாக சாதாரண வீரராக விளையாடினார்.

கவாஸ்கர் கணிப்பு:
இருப்பினும் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத அழுத்தத்தால் தடுமாறிய ஜடேஜா தலைமையில் ஆரம்பத்திலேயே 4 தோல்விகளை சந்தித்த சென்னையின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு பறிபோனது. அதை விட பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் சொதப்பிய ஜடேஜா அந்த பதவியே வேண்டாம் என்று மீண்டும் தோனியிடம் ஒப்படைத்து விட்டார். அந்த நிலையில் இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் தோனிக்கு பின் சென்னையை கேப்டனாக வழி நடத்தப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Ruturaj gaikwad

அதற்கு நிச்சயமாக ஜடேஜா செட்டாக மாட்டார் என்பது தெரிந்து விட்ட நிலையில் உலகின் நம்பர் ஒன் ஆல்ரவுண்டராகவும் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்ட அனுபவமும் கொண்ட பென் ஸ்டோக்ஸ் சென்னையையும் கேப்டனாக வழி நடத்த தகுதியானவர். ஆனால் இங்கிலாந்துக்காக முழு தொடரில் விளையாட முடியாது என்று ஏற்கனவே அறிவித்துள்ள அவரை கேப்டனாக அறிவிப்பது நிச்சயமாக சரியான முடிவாக இருக்காது என்றே சொல்லலாம்.

- Advertisement -

அப்படிப்பட்ட நிலையில் உள்ளூர் தொடரில் மகாராஷ்டிரா அணிக்காக கேப்டன்ஷிப் செய்த அனுபவமும் இளமையும் 2021 கோப்பை வெல்வதற்கு ஆரஞ்சு தொப்பியை வென்று முக்கிய பங்காற்றிய திறமையும் கொண்டுள்ள ருதுராஜ் கைக்வாட் தோனிக்கு பின் சென்னை அணியை வழி நடத்த தகுதியானவர் என்று முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

sunil-gavaskar

“அவர் உள்ளூர் கிரிக்கெட்டிலும் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் கொண்டவர். அதை விட அவர் எப்போதும் சென்னை அணியின் முக்கிய நபராக இருப்பவர். அந்த வகையில் பொதுவாக அணியின் முதன்மை வீரராக இருக்கும் ஒருவரை தான் நீங்கள் அந்த இடத்துக்கு தேர்வு செய்ய வேண்டும். எனவே கேப்டன்ஷிப் பதவியை கொடுப்பது அவர் தற்போது செயல்படுவதை விட தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதற்கு வழி வகுக்கும் என்று நான் கருதுகிறேன். எடுத்துக்காட்டாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ரோகித் சர்மாவை முதல் முறையாக கேப்டனாக நியமிப்பதற்கு முன்பாக இதே போல் அவர் அவ்வப்போது மட்டுமே அதிரடியாக விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார்”

இதையும் படிங்க: வீடியோ : ஏபிடி செல்பிஷ் பிளேயர் தான், என்ன சாதிச்சாரு? அங்க யார் வேணாலும் அடிக்கலாம் – கம்பீர் தடாலடி விமர்சனம்

“ஆனால் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக அறிவிக்கப்பட்ட பின் தம்முடைய விக்கெட் எதிரணிக்கு எந்தளவுக்கு முக்கியம் என்பதை உணர்ந்து ரோகித் சர்மா பெரிய ரன்களை குவிக்க தொடங்கினார். அதனால் அவர் தன்னுடைய விக்கெட்டை எளிதாக பரிசளிக்கவில்லை. எனவே ருதுராஜ் கைக்வாட் விஷயத்திலும் அதே போல் நடக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார். அவர் கூறுவது போல் தோனி போல பெரும்பாலான சமயங்களில் கூலாக இருப்பதால் ருதுராஜ் நீண்ட நாள் கேப்டனாக செயல்படும் தகுதியுடையவர் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement