சூரியகுமார் யாதவ் தேர்வில் மோதிக்கொண்ட பிரக்யான் ஓஜா – அபினவ் முகுந்த், யாருடைய கருத்து சரி?

Abhinav Mukund
- Advertisement -

வரும் பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் வென்று வரும் ஜூன் மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெறுமா என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இளம் வீரர் சர்ப்ராஸ் கான் தேர்வு செய்யப்படாதது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த 3 வருடங்களாக உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி கோப்பையில் 800, 900 போன்ற பெரிய ரன்களையும் சதங்களையும் இரட்டை சதங்களையும் விளாசி வரும் அவர் முரட்டுத்தனமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி தொடர்ந்து தேர்வுக்குழுவின் கதவை தட்டி வருகிறார்.

Suryakumar yadav sarfaraz khan

- Advertisement -

குறிப்பாக 80க்கும் மேற்பட்ட சராசரியை கொண்டுள்ள அவர் உலக அளவில் உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில் ஜாம்பவான் டான் பிராட்மேனுக்கு பின் அதிக பேட்டிங் சராசரியை கொண்ட வீரராக சாதனை படைத்து வருகிறார். இருப்பினும் அவரை மீண்டும் புறக்கணித்துள்ள தேர்வுக்குழு வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அசத்தலாக செயல்பட்டு உச்சகட்ட பார்மில் இருக்கிறார் என்பதற்காக உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில் 45க்கும் குறைவான பேட்டிங் சராசரியை கொண்டிருக்கும் சூரியகுமார் யாதவை தேர்வு செய்துள்ளது. ஆனால் உண்மையாக இந்திய டெஸ்ட் அணிக்கு இந்திய உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சிக் கோப்பையில் அசத்துபவரையே தேர்வு செய்ய வேண்டும்.

காரசார விவாதம்:
அதை செய்யாத தேர்வுக்குழு வரலாற்று சிறப்புமிக்க ரஞ்சி கோப்பைக்கு அவமானம் செய்துள்ளதாக இர்பான் பதான் உள்ளிட்ட நிறைய முன்னாள் இந்திய வீரர்களும் ரசிகர்களும் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த தேர்வு பற்றி முன்னாள் இந்திய வீரர்கள் ஆகாஷ் சோப்ரா, பிரக்யான் ஓஜா, அபினவ் முகுந்த் ஆகியோர் வியாகாம் 18 தொலைக்காட்சியில் விவாதித்தனர். அப்போது சர்பராஸ் கான் அசத்தலாக செயல்பட்டாலும் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வாவதற்கு சூரியகுமார் யாதவ் தகுதியானவர் என்று பிரக்யான் ஓஜா பேசியது பின்வருமாறு.

Pragyan Ojha

“மிகவும் இளமையான திறமையான சர்பராஸ் கான் தற்போது மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதனால் அவரை தேர்வு செய்ய நானே மிகுந்த ஆவலுடன் உள்ளேன். இருப்பினும் அவருக்கான நேரம் வரும். ஆனால் சூரியகுமார் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு ஆவதற்கு 100% தகுதியானவர்” என்று கூறினார். அதனால் அதிருப்தியடைந்த தமிழக வீரர் அபினவ் முகுந்த் அப்படி என்றால் எதற்காக ரஞ்சிக் கோப்பை வைத்திருக்க வேண்டும்? என்றும் ரஞ்சி கோப்பையில் வெளிப்படுத்தும் செயல்பாடுகள் அவ்வளவு கீழ் தரமாக போய்விட்டதா? என்ற வகையில் பதிலடி கொடுத்தது பின்வருமாறு.

- Advertisement -

“அப்படியானால் உள்ளூரில் வெளிப்படுத்தப்படும் செயல்பாடுகளுக்கு ஏன் பரிசு கிடைப்பதில்லை? சர்பராஸ் கான் தற்சமயத்தில் விவரிக்க முடியாத பார்மில் உள்ளார். நானாக இருந்தால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அவருக்கு இந்திய அணியின் தொப்பியை பரிசாக கொடுப்பேன். சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் அபாரமான பார்மில் இருக்கிறார். அதே மாதிரியான போர் குணத்தை டெஸ்ட் அணியிலும் அவரிடமிருந்து இந்திய அணியினர் விரும்புகிறார்கள். ஆனால் நான் வாழையடி வாழையான மரபை பின்பற்ற விரும்புகிறேன். அப்படி பார்க்கும் போது சர்பராஸ் கான் இந்திய அணியில் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

Abinav Mukund Sarfaraz Khan

அதாவது சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் செயல்பட்டாலும் இந்திய டெஸ்ட் அணிக்கு வாழையடி வாழையாக ரஞ்சிக்கோப்பையை மையமாக வைத்தே தேர்வு செய்வது வழக்கமாகும். அந்த கோணத்தில் பார்க்கும் போது சர்ப்ராஸ் கான் தான் இந்திய அணியில் இருக்க வேண்டுமென்று அபினவ் முகுந்த் ஆழமாக கூறியுள்ளார். சொல்லப்போனால் வெள்ளை பந்து கிரிக்கெட்டிலேயே டி20 கிரிக்கெட்டில் அசத்தும் சூரியகுமார் யாதவ் சற்று பொறுமையுடன் விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க: விராட் கோலி 5 வருசம் அசால்ட்டா செஞ்சாரு, ரோஹித் ஒரு வருசத்துலயே மூச்சு வாங்குறாரு – கம்ரான் அக்மல் விமர்சனம்

அதனால் இவர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என சமீபத்தில் ரசிகர்கள் பேசத் துவங்கியுள்ளனர். அப்படிப்பட்ட நிலையில் பொறுமையாக விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரால் அசத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகும். எனவே இந்த விவாதத்தில் அபினவ் முகுந்த் கூறும் கருத்தே சரியானதாக தோன்றுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement