விராட் கோலி 5 வருசம் அசால்ட்டா செஞ்சாரு, ரோஹித் ஒரு வருசத்துலயே மூச்சு வாங்குறாரு – கம்ரான் அக்மல் விமர்சனம்

Advertisement

விராட் கோலிக்கு பின் கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா சாதாரண இருதரப்பு தொடர்களில் வென்று டி20 போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் இந்தியாவை உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேற்றினார். இருப்பினும் அழுத்தமான ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் வெற்றியை பதிவு செய்த தவறிய அவர் பணிச்சுமை நிர்வாகம் மற்றும் காயத்தால் அடிக்கடி ஓய்வெடுத்ததால் வரலாற்றிலேயே முதல் முறையாக கடந்த வருடம் 7 வெவ்வேறு வீரர்களை கேப்டனாக பயன்படுத்த வேண்டிய பரிதாபம் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஏற்பட்டது. அவரைப் போலவே அணியில் இருக்கும் இதர வீரர்களும் சமீப காலங்களில் நல்ல ஃபிட்னஸ் கடைபிடிக்காமல் அடிக்கடி காயமடைந்து வெளியேறியது இந்திய அணிக்கு பின்னடைவை கொடுத்தது.

Rohit Sharma IND

அதனால் இந்திய அணிக்கு தேர்வாக யோ-யோ டெஸ்ட்டை மீண்டும் அவசியமாக்கியுள்ள பிசிசிஐ டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்கும் வேலைகளை தொடங்கியுள்ளது. மேலும் 2023ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை நட்சத்திர வீரர்கள் அடங்கிய அணிக்கு கடைசி வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

மூச்சு வாங்குது:
அத்துடன் அதில் வென்றாலும் தோற்றாலும் 36 வயதை ரோகித் சர்மா கடந்து விட்டதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவருக்கு பதில் புதிய கேப்டன் நியமிக்கப்படுவார் என்று செய்திகள் வெளியானது. மேலும் கேப்டனாக பொறுப்பேற்ற பின் ஹிட்மேன் என்ற பெயருக்கேற்றார் போல் அதிரடி காட்ட முடியாமல் தவிக்கும் ரோஹித் சர்மா ஃபிட்டாக இருந்தால் மொத்த இந்திய அணியும் ஃபிட்டாக இருக்கும் என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் வெளிப்படையாக விமர்சித்திருந்தார். இவை அனைத்தையும் பார்க்கும் போது இதற்கு விராட் கோலியே எவ்வளவோ பரவாயில்லை என்று தற்போது நிறைய ரசிகர்கள் வருந்துவதை பார்க்க முடிகிறது.

Kohli-and-Rohit

ஏனெனில் 2017இல் 3 வகையான கிரிக்கெட்டிலும் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற அவர் தொடர்ந்து 5 வருடங்களாக பெரும்பாலும் காயமடையாமல் இந்தியாவை வழி நடத்தி இருதரப்பு தொடர்களில் வெளிநாடுகளில் பல சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். ஆனாலும் உலக கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக விமர்சனங்களை சந்தித்த அவரை பிசிசிஐ வலுக்கட்டாயமாக பதவி நீக்கம் செய்தது.

- Advertisement -

இந்நிலையில் விராட் கோலி எளிதாக 5 வருடங்கள் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக செயல்பட்ட நிலையில் ரோஹித் சர்மா ஒரு வருடத்தை நிறைவு செய்வதற்குள் பல காயங்களை சந்தித்து முழுமையாக இந்தியாவை வழிநடத்த முடியாமல் தடுமாறுவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் விமர்சித்துள்ளார். குறிப்பாக டாஸ் வென்ற பின் என்ன முடிவு அறிவிக்க வேண்டும் என்பதில் கூட ரோகித் சர்மா திணறுவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

Kamran

“நான் எப்போதும் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் 3 வெவ்வேறு கேப்டன்கள் என்ற கருத்துக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டேன். வேண்டுமானால் 2 கேப்டன்களை வைத்துக் கொள்ளலாம். அதை கூட நீங்கள் இப்போது செய்ய முடியாது ஏனெனில் உலகக் கோப்பை விரைவில் நடைபெறுகிறது. தேவைப்பட்டிருந்தால் நீங்கள் கடந்த டி20 உலக கோப்பைக்கு பின் மாற்றத்தை செய்திருக்க வேண்டும். ஏனெனில் புதிதாக பொறுப்பேற்பவர் அனுபவம் பெற சில போட்டிகள் வாய்ப்பாக கிடைத்திருக்கும்”

இதையும் படிங்க: டிரெஸ்ஸிங் ரூமுக்கு உங்க பேரை வச்சிருக்காங்க? எப்படி பீல் பண்றீங்க? சுப்மன் கில் கேள்விக்கு – பதிலளித்த டிராவிட்

“இருப்பினும் வெள்ளை பந்து மற்றும் சிவப்பு நிற பந்து ஆகிய 2 வகையான கிரிக்கெட்டுக்கு 2 கேப்டன்கள் இருக்கலாம். அந்த வகையில் உங்களால் பணிச்சுமையை நிர்வகிக்க முடியும். அதே சமயம் 3 வகையான கிரிக்கெட்டிலும் ஒருவரால் கேப்டனாக இருப்பது மிகவும் கடினமாகும். ஆனால் மிகவும் தைரியசாலியான விராட் கோலி அதை 5 வருடங்கள் எளிதாக செய்தார். மறுபுறம் ரோஹித் சர்மா ஒரு வருடம் கூட நிறைவு செய்வதற்குள் என்ன நடந்தது என்று பாருங்கள். அவற் டாஸ் வென்ற பின் பேட்டிங் அல்லது பவுலிங் ஆகியவற்றில் எதை செய்ய வேண்டும் என்பதை கூட மறந்து விடுகிறார்” என்று கூறினார்.

Advertisement