டிரெஸ்ஸிங் ரூமுக்கு உங்க பேரை வச்சிருக்காங்க? எப்படி பீல் பண்றீங்க? சுப்மன் கில் கேள்விக்கு – பதிலளித்த டிராவிட்

Dravid-and-Gill
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது நேற்று இந்தூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரை மூன்றுக்கும் பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றியது.

- Advertisement -

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ஷர்துல் தாகூரும், தொடர் நாயகனாக சுப்மன் கில்லும் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் போட்டி முடிந்து மைதானத்தில் இருந்த தொடர் நாயகன் சுப்மன் கில் இந்திய அணியின் பயிற்சியாளரான டிராவிடுடன் ஒரு நேர்காணலை நடத்தினார்.

அப்போது அவர் எழுப்பிய ஒரு கேள்வி ஒன்றில் இந்த இந்தூர் மைதானத்தில் உங்களுடைய பெயர் வைக்கப்பட்டுள்ள ட்ரெஸ்ஸிங் ரூம் இருக்கிறது. அதற்குள் நீங்கள் நுழைவதை எப்படி பார்க்கிறீர்கள் என்று டிராவிடிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த டிராவிட் கூறுகையில் :

Dravid

இந்த ஒரு விடயத்திற்காக நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன். ஏனெனில் ஒரு மைதானத்தின் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு எனது பெயரை வைப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். சில நேரங்களில் இது சங்கடமாகவும் இருக்கும் .ஆனால் இந்திய அணிக்காக நீண்ட ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடிந்ததை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

- Advertisement -

அதற்காக கிடைத்த வெகுமதியாக நான் இதை பார்க்கிறேன் என்று டிராவிட் பதில் அளித்தார். மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் தான் டிராவிட் பிறந்தார். சிறுவயது முதல் கிரிக்கெட் பயின்று வந்த டிராவிட் இந்தூரில் தான் தனது கிரிக்கெட் பயிற்சிகளை ஆரம்பித்தார். பின்னர் அவரது குடும்பத்தினருடன் பெங்களூருக்கு அவர் குடிபெயர்ந்து விட்டதால் பெங்களூரில் இருந்து அவரது அடுத்த கட்ட கிரிக்கெட் பயணம் துவங்கியது.

இதையும் படிங்க : 2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த டி20 வீரர் இவர்தான். இந்திய வீரருக்கு விருதினை வழங்கிய ஐ.சி.சி

இருந்தாலும் இந்தூரில் தான் டிராவிட் பிறந்தார் என்பதனால் அவரை கொண்டாடும் வகையில் அந்த மைதானத்தின் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு அம்மாநில கிரிக்கெட் நிர்வாகம் டிராவிட் டிரெஸ்ஸிங் ரூம் என பெயர் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement