2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த டி20 வீரர் இவர்தான். இந்திய வீரருக்கு விருதினை வழங்கிய ஐ.சி.சி

Suryakumar-Yadav-1
Advertisement

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு விருதினை வழங்கி பாராட்டுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2022ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர்களின் பட்டியலை ஐசிசி அதிகாரவபூர்வமாக அறிவித்துள்ளது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டிற்கான டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற தகவலையும் தற்போது ஐசிசி வெளியிட்டுள்ளது.

sky 1

அந்த வகையில் கடந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மனாக இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவை தேர்வு செய்து ஐ.சி.சி விருது வழங்க இருப்பதுடன் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.

- Advertisement -

கடந்த 2022 ஆம் ஆண்டு மட்டும் டி20 கிரிக்கெட்டில் 31 போட்டிகளில் விளையாடியுள்ள சூரியகுமார் யாதவ் 1164 ரன்களை 46.56 சராசரியுடன் அடித்துள்ளார். அதோடு கடந்த ஆண்டு அவர் 187.46 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்துள்ளார். அதுமட்டும் இன்றி ஒரே காலண்டர் ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

sky

கடந்த ஆண்டு மட்டும் சூர்யகுமார் யாதவ் 68 சிக்ஸர்களை விளாசியது மட்டுமின்றி இரண்டு சதங்கள் மற்றும் 9 அரைசதங்களை பதிவு செய்துள்ளார். இதுவரை இந்திய அணிக்காக 45 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1578 ரன்களை குவித்துள்ளார். இதில் மூன்று சதங்களும் 13 அரை சதங்களும் அடங்கும்.

இதையும் படிங்க : IND vs AUS : அந்த இந்திய பவுலருக்கு எதிராக மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க – ஆஸி வீரர் எச்சரிக்கை

தனது 30 ஆவது வயதில் பெரிய போராட்டத்திற்கு மத்தியில் இடம்பிடித்த சூரியகுமார் யாதவ் தான் அறிமுகமான ஒரு ஆண்டிலேயே உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் பட்டத்தை வென்றுள்ளது ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement