IND vs AUS : அந்த இந்திய பவுலருக்கு எதிராக மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க – ஆஸி வீரர் எச்சரிக்கை

INDvsAUS
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது நடைபெற்று முடிந்தது. அதற்கு அடுத்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு அடுத்ததாக பிப்ரவரி மாதம் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

Steve Smith Virat Kohli IND vs AUS

- Advertisement -

இந்த தொடரில் இந்திய அணி மூன்றுக்கும் பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பதனால் இந்து தொடரானது இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் அடுத்த மாதம் பிப்ரவரி ஒன்பதாம் தேதி துவங்க உள்ள இந்த தொடருக்கு முன்னதாக தற்போது ஆஸ்திரேலிய அணியானது அறிவிக்கப்பட்ட வேளையில் இந்த இந்திய அணிக்கு எதிரான தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு எதிராக எச்சரிக்கையாக விளையாட வேண்டும் என ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ள பேட்ஸ்மேன் மேட் ரென்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

Ashwin Maat renshaw

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரை இடது கை பேட்ஸ்மன்களுக்கு எதிராக எப்பொழுதுமே அஸ்வின் சிறப்பாக பந்து வீசுவார். அதுமட்டுமின்றி ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 முறை இடது கை பேட்ஸ்மேன்களை வீழ்த்திய முதல் பவுலர் என்ற சாதனையும் அவர் படைத்திருக்கிறார். எனவே தற்போது உள்ள ஆஸ்திரேலிய அணியில் உள்ள இடது கை பேட்ஸ்மேன்கள் அவருக்கு எதிராக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.

- Advertisement -

அவரது பந்துவீச்சு நிச்சயம் நமக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். அவர் விதவிதமான பந்துகளை வீசி நம்மை நெருக்கடிக்கு உள்ளாக்குவார் என்று தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்தினை எப்படி சுழலவிட வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். அதே நேரத்தில் அவரது ஓவரை தாக்குப்பிடித்து விட்டால் நாம் சுலபமாக விளையாடலாம்.

இதையும் படிங்க : வெளியான 5 மகளிர் ஐபிஎல் அணிகளின் பெயர்கள் – சென்னை வாங்கியாதா? மொத்த அணிகள் – விலை விவரம் இதோ

இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்துவீசும் போது அதிக முறை அவுட் ஆக வாய்ப்பு இருக்கிறது. எனவே அதை எல்லாம் எதிர்த்து நாம் ஜாக்கிரதையாக விளையாட வேண்டும் என மேட் ரென்ஷா கூறியுள்ளார். அதே நேரத்தில் அஸ்வினை இம்முறை வென்று காட்ட இருப்பதாக மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான மார்னஸ் லாபுஷேன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement