IND vs NZ : ஓடிவந்து ரோஹித்தை கட்டிப்பிடித்த சிறுவன். பாதுகாவலர்களிடம் ரோஹித் சொன்னது – என்ன தெரியுமா?

Rohit-Fan
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே ஜனவரி 18-ஆம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்கிற கணக்கில் முன்னிலை வகித்த வேளையில் இன்று நடைபெற்று முடிந்த இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 108 ரன்களை மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக முகமது ஷமி மூன்று விக்கெட்டுகளையும், ஹார்டிக் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 109 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 20.1 ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 111 ரன்கள் குவித்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்கிற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது ரோகித் சர்மாவின் ரசிகர் ஒருவர் மைதானத்தில் ஓடி வந்து அவரை கட்டிப்பிடித்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் ரோகித் சர்மா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது பத்தாவது ஓவரில் அவரை நோக்கி ஒரு சிறுவன் வேகமாக ஓடி வந்து கட்டிப்பிடித்தார்.

- Advertisement -

சிறுவன் ஓடி வருவதை கண்ட மைதானத்தில் இருந்த பாதுகாவலர்கள் பின்னாடியே ஓடி வந்து அந்த சிறுவனை தூக்கிச் சென்றனர். அப்போது அந்த சிறுவனை ஒன்றும் செய்து விட வேண்டாம் என்றும் அவர் தன்னுடைய ரசிகர் என்பது மட்டுமின்றி சிறு வயதுடைய ஒருவர் என்பதனால் அவருக்கு எந்தவித தடையோ, தண்டனையோ விதிக்கக்கூடாது என்றும் அவரை பத்திரமாக வெளியில் மீட்டு செல்லுமாறும் ரோகித் சர்மா பாதுகாவலர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க : IND vs NZ : கடினமான மைதானத்தில் உலகின் நம்பர் ஒன் அணியை வீழ்த்திய இந்தியா – சாதனை வெற்றி பெற்றது எப்படி?

அதன்படி மைதானத்தில் நுழைந்த அந்த சிறுவனை மீட்ட பாதுகாவலர்கள் அவருக்கு எந்தவித தண்டனையோ, தடையோ வழங்காமல் அவரை வெளியே அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement