IND vs NZ : கடினமான மைதானத்தில் உலகின் நம்பர் ஒன் அணியை வீழ்த்திய இந்தியா – சாதனை வெற்றி பெற்றது எப்படி?

Rohit sharma IND vs NZ
- Advertisement -

2023 அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை வென்ற இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நியூஸிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஹைதராபாத் நகரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் சுப்மன் கில் இரட்டை சதமடித்தும் மைக்கேல் பிரேஸ்வெல் அதிரடியால் தடுமாறிய இந்தியா கடைசி ஓவரில் கச்சிதமாக செயல்பட்டு போராடி வென்று தொடரில் முன்னிலை பெற்றது. அந்த நிலையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி ஜனவரி 21ஆம் தேதியன்று சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் துவங்கியது.

பெரிய பவுண்டரிகளுடன் முதல் முறையாக ஒரு சர்வதேச போட்டி நடைபெறும் இம்மைதானத்தின் பிட்ச் பவுலிங்க்கு சாதகமாக இருந்ததை கணித்த கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு ஃபின் ஆலன் முதல் ஓவரிலேயே ஷமியிடம் டக் அவுட்டான நிலையில் அடுத்து வந்த ஹென்றி நிக்கோலஸ் 2 (20) ரன்களில் சிராஜ் வேகத்தில் அவுட்டாகி சென்றார். போதாக்குறைக்கு அடுத்து வந்த டார்ல் மிட்சேல் 1 (3) ரன்னில் ஷமியிடமும் தொடக்க வீரர் டேவோன் கான்வே ஹர்திக் பாண்டியாவிடம் 7 (16) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

எளிதான வெற்றி:
அதனால் சரிந்த அந்த அணியை பொறுப்புடன் காப்பாற்ற வேண்டிய கேப்டன் டாம் லாதமும் 1 (17) ரன்னில் சர்துல் தாகூரிடம் ஆட்டமிழந்தார். அதனால் 15/5 என்ற படுமோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணி 50 ரன்களை தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டாலும் கடந்த போட்டியில் போராடிய மைக்கேல் பிரேஸ்வெல் மீண்டும் பொறுப்பை வெளிப்படுத்தி 4 பவுண்டரியுடன் 22 (30) ரன்களில் அவுட்டானார். அவருடன் பேட்டிங் செய்த கிளன் பிலிப்ஸ் 36 (52) ரன்களும் மிச்சேல் சாட்னர் 27 (39) ரன்களும் எடுத்து 100 ரன்களை தாண்ட உதவி அவுட்டானாலும் 34.3 ஓவரில் நியூஸிலாந்து 108 ரன்களுக்கு சுருண்டது.

அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 3 விக்கெட்டுகளும் ஹர்திக் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்களும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 109 என்ற சுலபமான இலக்கை தொடங்கிய இந்தியாவுக்கு பிட்ச் பவுலிங் சாதகமாக இருந்ததை உணர்ந்த கேப்டன் ரோகித் சர்மா – சுப்மன் கில் ஜோடி நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.  நியூசிலாந்தின் பவுலிங் வலையில் விழாமல் திடமாகவும் சிறப்பாகவும் எதிர்கொண்ட இந்த ஜோடி 15 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்து பிரிந்தது.

- Advertisement -

அதில் சற்று அதிரடி காட்டிய ரோகித் சர்மா 7 பவுண்டரி 2 சிக்சருடன் அரை சதமடித்து 51 (50) ரன்கள் குவித்து ஆட்டமிழக்க அடுத்து வந்த விராட் கோலி 2 பவுண்டரியுடன் 11 (9) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் அசத்திய சுப்மன் கில் 6 பவுண்டரியுடன் 40* (53) ரன்களும் இஷான் கிசான் 8* (9) ரன்களும் எடுத்ததால் 20.1 ஓவரிலேயே 111/2 ரன்கள் எடுத்த இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. குறிப்பாக 20.1 ஓவரிலேயே வென்ற இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மிகவும் குறைந்த ஓவரில் அதிவேகமாக வெற்றிகரமாக சேசிங் செய்து சாதனை படைத்தது. இதற்ககு முன் 2010இல் தம்புலாவில் 88 ரன்களை 29.3 ஓவரில் சேசிங் செய்ததே முந்தைய சாதனையாகும்.

முன்னதாக இந்தியாவும் விளையாடாத இந்த மைதானம் பவுலிங்க்கு சாதகமானது என்பதை போட்டி நாளன்று பார்த்து கணித்த இந்திய அணி அதற்கேற்றார் போல் டாஸ் வென்று முதலில் பந்து வீசி கட்டுக்கோப்புடன் செயல்பட்டு நியூசிலாந்தை மடக்கி பிடித்தது போதே வெற்றி உறுதியாகி விட்டது. குறிப்பாக முதல் போட்டியில் வெற்றி உறுதியான மிதப்பில் சற்று அசால்டாக வீசிய இந்திய பவுலர்கள் இம்முறை ஆரம்பம் முதலே நியூசிலாந்து வீரர்களை அதிரடி காட்ட விடாமல் சிறப்பாக செயல்பட்டு உறுதி செய்த வெற்றியை பேட்ஸ்மேன்கள் சாத்தியமாக்கினர்.

இதையும் படிங்க:IND vs NZ : கடினமான மைதானத்தில் உலகின் நம்பர் ஒன் அணியை வீழ்த்திய இந்தியா – சாதனை வெற்றி பெற்றது எப்படி?

அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்றுள்ள இந்தியா ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் ஒருநாள் அணியாக திகழும் நியூசிலாந்தை தோற்கடித்து சொந்த மண்ணில் எதிரணி யாராக இருந்தாலும் நாங்கள் தான் கில்லி என்பதை நிரூபித்து 2023 உலக கோப்பை வெல்லும் பயணத்தில் வெற்றி நடை போடுகிறது.

Advertisement