பாண்டியாவால ரொம்ப நாள் கேப்டனா இருக்க முடியாது. ஏன் தெரியுமா? – இர்பான் பதான் ஓபன்டாக்

Irfan-Pathan
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2022-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் முதல்முறையாக கேப்டன் பொறுப்பினை ஏற்ற ஹார்டிக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியை வெற்றிகரமாக வழிநடத்தி சென்று ஐபிஎல் கோப்பையையும் பெற்றுக் கொடுத்தார். ஐபிஎல் தொடருக்கு முன்னதாக இந்திய அணிக்கு மீண்டும் வருவாரா என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் கேப்டனாகவே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்திய அணிக்கு திரும்பியதோடு மட்டுமின்றி தற்போது முக்கிய வீரராகவும் மாறியுள்ளார்.

Hardik Pandya IND vs ENg

- Advertisement -

ஐபிஎல் தொடரில் அவரது சிறப்பான கேப்டன்ஷிப் காரணமாக அதிக பாராட்டினை பெற்ற பாண்டியாவிற்கு இந்திய அணியின் நிர்வாகமும் டி20 கிரிக்கெட்டின் கேப்டன் பதவியை வழங்கியது. அந்த வகையில் நடைபெற்று முடிந்த அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் கேப்டனாக அசத்தலாக செயல்பட்டார்.

அதனைத்தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிராக தற்போது இன்று துவங்கவுள்ள டி20 தொடருக்கான இந்திய அணிக்கான கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று எதிர்வரும் டி20 உலக கோப்பைக்கும் அவரே இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.

இந்நிலையில் ஹார்டிக் பாண்டியாவால் கேப்டனாக நீண்ட தூரம் பயணிக்க முடியாது என்றும் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : ஹார்டிக் பாண்டியாவின் கேப்டன்சி உண்மையில் மிகச் சிறப்பாக தான் இருக்கிறது.

- Advertisement -

குஜராத் அணியை அவர் வழிநடத்திய விதமும் இந்திய அணிக்காக தற்போது செயல்பட்டு விதமும் அருமையாக இருக்கிறது. அவர் அணியை சிறப்பாக வழிநடத்துகிறார் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதே வேளையில் அவரை நிரந்தர கேப்டனாக மாற்றினால் அது சரியான முடிவாக இருக்காது.

இதையும் படிங்க : வீடியோ : யோ-யோ டெஸ்ட் அவசியமானது ஏன்? 3 வருடத்துக்கு முன்பே பிரதமர் மோடியிடம் விளக்கிய கிங் கோலி – ரசிகர்கள் ஆதங்கம்

ஏனெனில் அவருக்கு தற்போது இருக்கும் உடல் நிலையை வைத்து பார்க்கும் போது தொடர்ச்சியாக அவர் இந்திய அணியில் விளையாடினால் அவரது உடற்தகுதி கேள்விக்குறியாகிவிடும். எனவே என்னை பொறுத்தவரை ஹார்டிக் பாண்டியாவை முழுநேர கேப்டனாக மாற்றாமல் டி20 கிரிக்கெட்-க்கு மட்டும் கேப்டனாக நியமிக்கலாம் என்று இர்ஃபான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement