யோ-யோ டெஸ்ட் அவசியமானது ஏன்? 3 வருடத்துக்கு முன்பே பிரதமர் மோடியிடம் விளக்கிய கிங் கோலி – ரசிகர்கள் ஆதங்கம்

Modi Virat Kohli
- Advertisement -

2022ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் செயல்பாடுகள் மற்றும் தோல்விகளைப் பற்றி ஜனவரி 1ஆம் தேதியன்று மும்பையில் பிசிசிஐ தலைமை குழு விவாதித்தது. பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா, கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் கலந்து கொண்ட அந்த கூட்டத்தில் வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் உத்தேச 20 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிப்புகள் வெளியானது.

அத்துடன் அந்த வீரர்கள் 2023 ஐபிஎல் தொடரில் முழுமையாக விளையாடாமல் தேவையான ஓய்வெடுப்பதற்கு அந்தந்த அணி நிர்வாகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதை விட வரும் காலங்களில் இந்தியாவுக்காக விளையாடும் வீரர்கள் முதலில் யோ-யோ டெஸ்டில் தேர்வாக வேண்டியது மீண்டும் கட்டாயமாக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது. ஏனெனில் கடந்த வருடம் கேப்டன் ரோகித் சர்மா பெரும்பாலும் காயம் மற்றும் பணிச்சுமை என்ற பெயரில் ஓய்வெடுத்ததால் வரலாற்றில் 7 வெவ்வேறு வீரர்களை கேப்டனாக பயன்படுத்த வேண்டிய அவலம் இந்தியாவுக்கு ஏற்பட்டது.

- Advertisement -

அப்போதே கடைபிடித்த கிங்:
அது போக ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹார் போன்ற முக்கிய வீரர்கள் கடைசி நேரத்தில் காயமடைந்து வெளியேறியது டி20 உலக கோப்பையில் இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்தது. அதற்கு இந்திய கிரிக்கெட் அணியில் தற்சமயத்தில் ஃபிட்னஸ் சரியாக கடைபிடிக்காததே அந்த அடுத்தடுத்த காயங்களுக்கு காரணமாக அமைந்தது என்பது தெளிவாக தெரிந்தது. அதனால் முழு உடல் தகுதியை எட்டுவதற்கு கடினமான சோதனைகளை கொண்ட யோ-யோ டெஸ்டை பிசிசிஐ மீண்டும் கொண்டு வந்துள்ளது.

சொல்லப்போனால் 2017 முதல் முழு நேர கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி இந்த டெஸ்டை மிகவும் கட்டாயமாக கடை பிடித்து யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இந்திய அணியில் இடம் என்ற நிலைமையை கொண்டு வந்தார். இருப்பினும் அவருக்குப்பின் புதிதாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா அதை கொஞ்சம் கொஞ்சமாக மூட்டை கட்டியதுடன் பிட்னஸ் விட நல்ல திறமை தான் வெற்றியை பெற்று கொடுக்கும் என்று ஒரு முறை பேட்டியும் கொடுத்தார். ஆனால் தற்போது மீண்டும் யோ-யோ டெஸ்ட் கொண்டு வரப்பட்டதிலிருந்து ரோகித் சர்மாவின் கூற்று தவறு என்பது நிரூபணமாகியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் வீரர்களின் உடல் தகுதியில் மிகவும் கண்டிப்புடன் இருந்த முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த 2020ஆம் ஆண்டு யோ-யோ டெஸ்டின் அவசியத்தை பிரதமர் மோடியுடன் ஆன்லைனில் பேசுவதற்கு கிடைத்த வாய்ப்பில் விளக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மோடி அவர்களிடம் விராட் கோலி பேசியது பின்வருமாறு.

“உடல் தகுதியை பொறுத்த வரை இந்த டெஸ்ட் மிகவும் முக்கியமானது. குறிப்பாக உலக அளவில் விளையாட்டுத்துறையில் இருக்கும் பிட்னெஸை ஒப்பிடும் போது உலகின் மற்ற அணிகளை காட்டிலும் நமது பிட்னஸ் குறைவாகவே உள்ளது. எனவே அதை நாம் முன்னிலையில் எடுத்துக் கொண்டு முன்னேற வேண்டும். அது வெற்றிக்கு மிகவும் அடிப்படையான ஒன்றாகும். முதலில் அந்த தேர்வில் நான் ஓடுவேன். ஒருவேளை நான் அதில் தோல்வியுற்றால் நானும் தேர்வுக்கு வரமாட்டேன் என்பதே அதனுடைய நிபந்தனையாகும். அந்த கலாச்சாரத்தை அமைப்பது முக்கியமாகும். அது நமது ஒட்டுமொத்த உடற்பயிற்சி நிலைகளில் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்” என்று கூறினார்.

இதையும் படிங்கஎனக்கும் இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்திருக்கு. ரிஷப் பண்ட் விபத்து குறித்து பேசிய – கபில் தேவ்

இதை பார்க்கும் ரசிகர்கள் அப்படியானால் விராட் கோலி சரியான பாதையில் தான் இந்திய அணியை வழி நடத்தியுள்ளார் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். இருப்பினும் உலக கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அவரை வலுக்கட்டாயமாக பிசிசிஐ தான் கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதாகவும் ரசிகர்கள் வேதனையை வெளிப்படுத்துகின்றனர். மொத்தத்தில் ரோகத் சர்மா வருகையால் இந்திய அணியின் பிட்னெஸ் வீணாய் போய் விட்டதாக ரசிகர்கள் கோபத்தையும் வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement