எனக்கும் இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்திருக்கு. ரிஷப் பண்ட் விபத்து குறித்து பேசிய – கபில் தேவ்

- Advertisement -

இந்திய அணியின் முன்னணி இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி அதிகாலை டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அதனை தொடர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரிஷப் பண்ட் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த இரண்டு நாட்களாகவே அவருக்கு தொடர்ச்சியாக அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பிறகு தற்போது அவர் நல்ல உடல்நிலையை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

Rishabh-Pant-4

- Advertisement -

அவரது காயத்திற்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்த ஆறு மாதங்களுக்கு ரிஷப் பண்ட்டால் கிரிக்கெட் விளையாட முடியாது என்று கூறப்படும் வேளையில் அவர் முழு ஓய்வில் இருக்க உள்ளார். ரிஷப் பண்டிற்கு நடைபெற்ற இந்த விபத்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வேளையில் அவரின் விபத்து குறித்த தங்களது கருத்துக்களையும் பல்வேறு முன்னாள் வீரர்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான கபில் தேவ் கூறுகையில் : வீரர்கள் இதுபோன்ற சில விஷயங்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்திய அணிக்காக விளையாடும் மிகப்பெரிய பொறுப்பு இருக்கும்பொழுது கவனக்குறைவாக ஏற்படும் இது போன்ற விபத்துகளை தவிர்க்க வேண்டும்.

IND vs SA Rishabh Pant Quiton De Kock Rohit Sharma

அதுவும் ரிஷப் பண்ட் போல திறமை வாய்ந்த இளம் வீரர் இப்படி விபத்தில் சிக்கியது வருத்தம் அளிக்கிறது. என்னுடைய ஆரம்ப கட்டத்திலும் இதுபோன்ற ஒரு விபத்து எனக்கு நிகழ்ந்துள்ளது. நான் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும்போது விபத்தில் சிக்கி இருக்கிறேன். அப்போது எனக்கு அடியும் பட்டது இதன் காரணமாக அன்றிலிருந்து என்னுடைய சகோதரர் என்னை தனியாக பைக் ஓட்ட அனுமதிக்க மாட்டார்.

- Advertisement -

அந்த அளவிற்கு அந்த சம்பவம் எனக்கு மோசமான ஒன்றாக அமைந்தது. எனவே இந்திய அணியில் உள்ள வீரர்கள் சற்று கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அவர்களாகவே கார் ஓட்டக்கூடாது நிச்சயம் வீரர்கள் அனைவரும் தங்களுக்கென தனியாக ஒரு டிரைவரை நியமித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நாட்டுக்காக விளையாடும் பொறுப்புள்ள நீங்கள் கவனக் குறைவாக செயல்படக்கூடாது.

இதையும் படிங்க : ரோஹித் சர்மா, விராட் கோலிய வெச்சுகிட்டு உ.கோ ஜெயிக்கவே முடியாது, அதை செய்ங்க – கபில் தேவ் கூறும் காரணம் இதோ

வீரர்களுக்கு கார் ஓட்டுவதில் அலாதி பிரியம் இருந்தாலும் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம். எனவே தனியாக டிரைவரை வைத்துக் கொள்ளுங்கள் என இந்திய வீரர்களுக்கு கபில் தேவ் அட்வைஸ் கொடுத்துள்ளார். அதேபோன்று கிரிக்கெட் போட்டிகளை தவிர்த்து தனிப்பட்ட வாழ்க்கையிலும் வீரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் கபில் தேவ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement