ரோஹித் சர்மா, விராட் கோலிய வெச்சுகிட்டு உ.கோ ஜெயிக்கவே முடியாது, அதை செய்ங்க – கபில் தேவ் கூறும் காரணம் இதோ

Kapil Dev Rohit Sharma Virat Kohli
- Advertisement -

2023 புத்தாண்டில் ஜூன் மாதம் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 அவர் உலகக் கோப்பையை வென்றாக வேண்டிய அழுத்தத்தில் இந்திய கிரிக்கெட் அணி உள்ளது. ஏனெனில் கடந்த வருடம் வழக்கம் போல இருதரப்பு தொடர்களில் வென்ற இந்தியா அழுத்தம் வாய்ந்த ஆசிய மற்றும் டி20 உலக கோப்பை ஆகிய பெரிய தொடர்களில் நாக் அவுட் போட்டிகளில் சொதப்பலாக செயல்பட்டு கொஞ்சமும் முன்னேறாத செயல்பாடுகளை வெளிப்படுத்தியது. அத்துடன் கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருந்த இந்தியா அதன் பின் கடந்த 10 வருடங்களாக எந்த ஐசிசி கோப்பையையும் வெல்ல முடியாமல் திண்டாடி வருகிறது.

INDia

- Advertisement -

அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ள இந்தியா இந்த வருடம் கிடைத்துள்ள 2 வாய்ப்பில் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு உலக கோப்பையை சாதித்து காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் விராட் கோலி, சூரியகுமார் ஆகியோரை தவிர்த்து கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட பெரும்பாலான சீனியர்கள் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ஜெயிக்க முடியாது:
அதனால் காலம் கடந்த சீனியர்களை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக புதிய வெற்றி அணியை உருவாக்கும் வேலையை ஹர்திக் பாண்டியா தலைமையில் பிசிசிஐ தொடங்கியுள்ளது. இருப்பினும் சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலகக்கோப்பையில் கடைசி வாய்ப்பாக ரோகித் சர்மா தலைமையில் நட்சத்திர வீரர்கள் அடங்கிய முதன்மை அணி விளையாட உள்ளது. ஆனாலும் சமீப காலங்களில் தடவலாகவே செயல்பட்டு வரும் பெரும்பாலான சீனியர் வீரர்களை கொண்ட அந்த அணி சொந்த மண்ணிலும் கோப்பையை வெல்லுமா என்ற கவலை இந்திய ரசிகர்களிடம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

rohith

இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் உலகக் கோப்பை வென்று கொடுப்பார்கள் என்று நினைத்தால் அது நிச்சயம் நடக்காது என்று முன்னாள் ஜாம்பவான் கபில் தேவ் அதிரடியாக விமர்சித்துள்ளார். எனவே இனியும் அவர்களை நம்பிக் கொண்டிருக்காமல் இளம் வீரர்களை நம்பினால் மட்டுமே இந்தியாவால் கோப்பையை வெல்ல முடியும் என்று வெளிப்படையாக கூறியுள்ள அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நீங்கள் உலக கோப்பையை வெல்ல விரும்பினால் அதற்கு தேர்வுக்குழுவினர், பயிற்சியாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் ஆகியோர் சேர்ந்து சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். குறிப்பாக தன்னிச்சையான ஆர்வங்களை புறந்தள்ளி விட்டு அவர்கள் இந்தியாவையும் இந்திய அணியை பற்றியும் யோசிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் இன்னும் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் அவர்களைப் போன்ற 2 – 3 வீரர்கள் உலகக்கோப்பையை வென்று கொடுப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தால் அது நிச்சயமாக நடைபெறாது”

Kapil Dev Rohit Sharma

“எனவே அவர்களைத் தாண்டி நீங்கள் உங்களது அணியை நம்ப வேண்டும். உங்களிடம் அது போன்ற அணி இருக்கிறதா? நிச்சயமாக உள்ளனர். உங்களிடம் உலக கோப்பையை வெல்லும் அளவுக்கு குறிப்பிட்டளவு மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்களா? ஆம் இருக்கிறார்கள். நம்மிடம் உலகக் கோப்பையை வெல்லும் அளவுக்கு வீரர்கள் இருக்கிறார்கள். எப்போதுமே சில வீரர்கள் உங்களது அணியின் தூண்களாக மாறுவது வழக்கமாகும். அவர்களை சுற்றிய அணியும் அமைவது வழக்கமாகும். ஆனால் அதை நாம் உடைத்து வருங்காலத்திற்காக அவர்களைப் போன்ற புதிய 5 – 6 வீரர்களை உருவாக்க வேண்டும்”

இதையும் படிங்கஸ்லெட்ஜிங் செய்ய விருப்பம் இல்ல. அவங்கள மிரட்ட எங்களிடம் வேற பிளான் இருக்கு – கேப்டன் பாண்டியா கருத்து

“அதைத்தான் நான் சொல்கிறேன். அதாவது நீங்கள் விராட் மற்றும் ரோகித்தை மட்டும் நம்பிக்கொண்டே இருக்க முடியாது. தங்களுடைய பொறுப்பை முழுமையாக்கும் தன்மை கொண்ட வீரர்கள் உங்களுக்கு தேவைப்படுகிறது. அதற்கு இளம் வீரர்கள் முன்னோக்கி வந்து இது எங்களுடைய நேரம் என்று காட்டும் அளவுக்கு சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று கூறினார். முன்னதாக பெரிய பெயரை வைத்துக் கொண்டு எத்தனை நாட்கள் சுமாராக செயல்பட்டு இளம் வீரர்களின் வாய்ப்பைக் கெடுப்பீர்கள் என்று விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை ஏற்கனவே கபில் தேவ் விமர்சித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement