ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தங்களது கடைசி போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் விளையாடியது. ஏற்கனவே “சூப்பர் 4” சுற்றின் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவியதால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு இழந்த வேளையில் இந்த இறுதி போட்டியில் ஆறுதல் வெற்றியையாவது பெறுமா? என்று ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டி பெரும் வரவேற்பினை பெற்றது.

அதன்படி இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீசியது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 212 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக துவக்க வீரர்களான ராகுல் 62 ரன்களையும், விராட் கோலி 122 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெடுகளை இழந்து 111 ரன்கள் மட்டுமே குவிக்க இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியை கே.எல் ராகுல் கேப்டனாக தலைமை தாங்கினார். இந்த போட்டியில் ரோகித் சர்மா, ஹார்திக் பாண்டியா மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் விளையாடவில்லை. இந்நிலையில் இந்திய அணி கேப்டனான ரோஹித் சர்மா இந்த போட்டியில் ஏன் விளையாடவில்லை என்பது குறித்து அணியின் கேப்டன் ராகுல் டாசின் போதே விளக்கத்தை கொடுத்தார்.

இது குறித்து அவர் கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். ஏனெனில் முதலில் பேட்டிங் செய்து எங்களுக்கு நாங்களே சவாலை அளிக்க விரும்புகிறோம். ரோகித் சர்மா இந்த போட்டியில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்ளவே அணியில் இருந்து வெளியேறினார்.
அந்த வகையில் ஓய்வு எடுத்துக்கொள்ள மட்டும் தான் ரோகித் சர்மா இந்த போட்டியில் விளையாடவில்லை. அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடுவது என்பது இதுபோன்ற சூழ்நிலையில் கடினமான ஒன்று. அந்த வகையில் தான் ரோகித் சர்மா அணியிலிருந்து ஓய்வு காரணமாக வெளியேறினார்.
இதையும் படிங்க : டி20 உ.கோ அணியில் 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுக்கும் ஸ்டார் வீரர் – ரசிகர்கள் மகிழ்ச்சி
டி20 உலக கோப்பை அருகில் வரும்போது இது போன்ற முக்கியமான தொடர்கள் என்பது எங்களுக்கு பல பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது. நிச்சயம் உலக கோப்பையிலும் எங்கள் அணி சரியான வீரர்களுடன் களமிறங்கி வெற்றி பெறும் என கே.எல் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.



