இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரராக விளையாடிய இளம் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி அதிக ரன்களை குவித்த வீரராக முதலிடம் பிடித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார். அதனை தொடர்ந்து அவரை இந்திய சீனியர் அணியில் சேர்க்க வேண்டும் என்ற ஆதரவுகளும் முன்னாள் வீரர்கள் மத்தியில் பெருகியது. அதனை தொடர்ந்து இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய ஏ அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
என்னுடைய கனவு நிறைவேறியது : வைபவ் சூர்யவன்ஷி நெகிழ்ச்சி
அப்படி இலங்கை சென்றிருந்த வைபவ் சூர்யவன்சி இலங்கை நாட்டில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்த தொடருக்கு இடையே அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களுக்கான இந்திய டி20 அணியில் அவருக்கு துவக்க வீரருக்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி இந்த டி20 தொடர்களில் பங்கேற்று விளையாடயிருக்கும் வேளையில் நிச்சயம் இந்த அயர்லாந்து தொடரில் இந்திய அணிக்காக வைபவ் சூரியவன்ஷி மிக இளம் வயதில் அறிமுகமாகி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார் என்று உறுதியாகியு ள்ளது. இவ்வேளையில் இந்திய சீனியர் அணியின் வாய்ப்பினை பெற்ற அவருக்கு தற்போது இந்திய அணியின் நீலநிற ஜெர்சியும் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட ஒரு பதிவில் பி.சி.சி.ஐ குறிப்பிட்டதாவது : மதிப்புக்குரிய ரசிகர்களே ஒட்டுமொத்த தேசமும் எதிர்பார்த்து காத்திருந்த தருணம் வந்துவிட்டது. இந்திய ஜெர்சியில் வைபவ் சூர்யவன்சியின் மிகச் சிறப்பான தருணத்தை காணுங்கள் என்று அந்த வீடியோவை பதிவு செய்திருந்தது. இவ்வேளையில் தான் இந்திய அணியில் முதல் முறையாக விளையாட இருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள வைபவ் சூர்யவன்ஷி நெகிழ்ச்சியான சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த தருணத்தை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஏனெனில் நான் முதல் முறையாக பேட்டை கையில் எடுத்து மைதானத்திற்கு சென்றபோதே இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு இருந்தது. இன்று என்னுடைய பயணத்தின் மிக முக்கியமான படி பூர்த்தியாகி உள்ளது.
இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியா 2027 வேர்ல்டுகப்ல விளையாடுவார் என்ற எண்ணம் எனக்கு இல்லை.. காரணம் இதுதான் – கைப் பேட்டி
இந்த உணர்வினை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை. இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு தற்போது எனக்கு நினைவாகியுள்ளது. இந்திய அணியின் ஜெர்சியை பார்த்தது எனக்கு ஒரு கனவு போன்று இருந்தது. என்னால் என்னுடைய மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை நான் கற்பனை செய்து கூட பார்க்காத விஷயங்கள் எனக்கு நடந்துள்ளது என வைபவ் சூர்யவன்ஷி கூறியது குறிப்பிடத்தக்கது.



