IND vs PAK : அர்ஷ்தீப் சிங்கால் தப்பித்த சீனியர் வீரர். இல்லனா அவரும் நல்லா சிக்கியிருப்பாரு – இதை கவனிசீங்களா?

Arshdeep-Singh
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் பலப்பரிட்சை நடத்தினர். இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்யவே முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 181 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 60 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது முகமது ரிஸ்வான் மற்றும் முகமது நவாஸ் ஆகியோரது அருமையான ஆட்டம் காரணமாக கடைசி ஓவரில் ஒரு பந்து மீதம் இருக்கையில் 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தற்போது பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது பாகிஸ்தான அணி சிறப்பாக விளையாடி வந்த வேளையில் கடைசி கட்டத்தில் வெற்றிக்கு நெருக்கடியும் ஏற்பட்டது. அப்போது 18 வது ஓவரில் ரவிபிஷ்னாய் வீசிய பந்தில் ஆசிப் அலி கொடுத்த எளிதான கேச்சை அர்ஷ்தீப் சிங் தவற விட்டார். அவர் தவறவிட்ட அந்த வாய்ப்பு போட்டியையே இந்திய அணியின் கையில் இருந்து நழுவவிட்டது என்று கூறலாம்.

Bhuvi

ஏனெனில் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஆசிப் அலி வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவரில் 26 ரன்கள் தேவை என்றபோது குஷ்தில் ஷா உடன் சேர்ந்து 19-வது ஓவரில் 19 ரன்கள் குவித்து விட்டார். இதன் காரணமாக கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உண்டானதால் 19ஆவது ஓவரிலேயே பாகிஸ்தான் அணி கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்தது. இந்நிலையில் அர்ஷ்தீப் சிங் நழுவவிட்ட அந்த கேட்ச் தான் தோல்விக்கு காரணம் என்று சமூக வலைதளத்தில் பெரிய விமர்சனங்கள் எழுந்துள்ளன.

- Advertisement -

இந்நிலையில் அர்ஷ்தீப் சிங் விட்ட அந்த கேட்ச்சினால் புவனேஸ்வர் குமார் செய்த பெரிய தவறு மறைந்து போய்விட்டதாகவும் அதனால் அவர் மீது முழு கவனமும் செல்லவில்லை என்றும் ரசிகர்கள் சிலர் தங்களது குறிப்புகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் எப்பொழுதுமே டெத் ஓவரில் மிகச் சிறப்பாக பந்து வீசக்கூடிய புவனேஸ்வர் குமார் நேற்று பந்துவீச மிகவுமே சிரமப்பட்டார் என்று கூற வேண்டும்.

இதையும் படிங்க : விராட் கோலியை பாத்து எப்படி விளையாடனும்னு அவங்க 2 பேரும் கத்துக்கனும் – கவுதம் கம்பீர் ஆவேசம்

ஏனெனில் வைட் யார்க்கர், யார்க்கர், ஸ்லோ பவுன்சர் என சிறப்பாக பந்து வீசும் புவனேஷ் குமார் நேற்றைய போட்டியில் எளிதாக பந்து வீசிவிட்டார். அவரது அந்த 19 ஆவது ஓவரில் 19 ரன்கள் செல்லாமல் 8 முதல் 10 ரன்கள் வரை சென்றிருந்தால் கூட போட்டி இந்திய அணி பக்கம் இருந்திருக்கும். ஆனால் அர்ஷ்தீப் சிங் செய்த தவறினால் புவனேஸ்வர் குமார் செய்த தவறு தெரியாமல் போய்விட்டதாக ரசிகர்கள் சிலர் கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement