கேப்டனாக களமிறங்கும் சச்சின் டெண்டுல்கர் – லெஜெண்ட்ஸ் தொடரின் 8 அணி வீரர்கள், தேதி, மைதானங்கள் இதோ

sachin
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது நாட்டுக்காக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த வீரர்களை பார்த்து வளர்ந்த ரசிகர்கள் அவர்கள் ஓய்வு பெற்ற பின்பு தாங்கள் ஹீரோக்களாக கொண்டாடிய ஜாம்பவான்களின் ஆட்டத்தை பார்க்க முடியாமல் ஏங்கும் நிலைமை உருவாகிறது. அவர்களது தாகத்தை தணிக்கும் வகையில் சமீப காலங்களில் ஜாம்பவான்கள் பங்கேற்கும் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் தொடர்கள் நடைபெற துவங்கியுள்ளது. அதில் ரசிகர்களை மகிழ்விப்பதுடன் பொதுமக்களுக்கு சாலை விபத்துகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட தொடர் தான் ரோட் சேஃப்டி வேர்ல்ட் சீரிஸ் ஆகும்.

கடந்த 2020இல் முதல் முறையாக நடைபெற்ற இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஜாம்பவான் வீரர்கள் இடம்பெற்ற 6 அணிகள் பங்கேற்றன. அதில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக செயல்பட்ட இந்திய லெஜண்ட்ஸ் அணி முதல் சீசனிலேயே அபாரமாக செயல்பட்டு கோப்பை வென்றது. வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், இர்பான் பதான் என நட்சத்திர முன்னாள் இந்திய வீரர்கள் விளையாடிய அந்த தொடர் எதிர்பார்த்ததைவிட ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

- Advertisement -

2வது சீசன்:
அதனால் இந்த தொடரின் 2வது சீசனை நடத்த திட்டமிட்டுள்ள அதன் நிர்வாகம் அதற்கான தேதிகளையும் மைதானங்களையும் வெளியிட்டுள்ளது. இந்திய விளையாட்டு மற்றும் சாலைகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆதரவுடன் நடைபெறும் இந்த தொடர் இம்முறை வரும் செப்டம்பர் 10 முதல் அக்டோபர் 1 வரை நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் அனைத்துப் போட்டிகளும் இந்தியாவிலுள்ள கான்பூர், ராய்ப்பூர், இந்தூர் மற்றும் டேராடூன் ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி கான்பூரில் நடைபெறும் நிலையில் 2 அரையிறுதிப் போட்டிகளும் வெற்றியாளரை தீர்மானிக்கும் மாபெரும் இறுதிப் போட்டியும் ராய்ப்பூரில் நடைபெற உள்ளது.

- Advertisement -

8 அணிகள், கேப்டனாக சச்சின்:
கடந்த முறை 6 அணிகள் மட்டுமே பங்கேற்று வெற்றி பெற்ற இந்த தொடரில் இம்முறை இயன் பெல் தலைமையிலான இங்கிலாந்து மற்றும் ராஸ் டெய்லர் தலைமையிலான நியூசிலாந்து ஆகிய 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் கடந்த முறை கேப்டனாக செயல்பட்டு இந்திய லெஜெண்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இம்முறையும் கேப்டனாக களமிறங்க உள்ளார். இந்த தொடருக்கான முழு அட்டவணை விரைவில் வெளியாக உள்ள நிலையில் இதில் பங்கேற்கும் 8 அணிகளின் விவரம் இதோ:

இந்திய லெஜெண்ட்ஸ்: சச்சின் டெண்டுல்கர் (கேப்டன்), யுவராஜ் சிங், இர்பான் பதான், யூசுப் பதான், ஹர்பஜன் சிங், முனாஃப் படேல், சுப்ரமணியம் பத்ரிநாத், ஸ்டூவர்ட் பின்னி, நமன் ஓஜா, கோணி, பிரக்யன் ஓஜா, வினை குமர், அபிமன்யு மிதுன், ராஜேஷ் பவர், ராகுல் சர்மா.

- Advertisement -

நியூஸிலாந்து லெஜெண்ட்ஸ்: ராஸ் டெய்லர் (கேப்டன்), ஜேக்கப் ஓரம், ஜெமி ஹொவ், ஜேசன் ஸ்பைஸ், கைல் மில்ஸ், ஸ்காட் ஸ்டைரிஸ், ஷேன் பாண்ட், டீன் ப்ரோவ்னில், ப்ரூஸ் மார்ட்டின், நெய்ல் ப்ரூம், தேவிச், கிரைக் மெக்மில்லன், ஹோப்கின்ஸ், ஹிமிஸ் பென்னட், ஆரோன் ரெட்மொண்ட்

ஆஸ்திரேலிய லெஜெண்ட்ஸ்: ஷேன் வாட்சன் (கேப்டன்), அலெஸ் டூலன், பென் டங், பிராட் ஹோட்ஜ், பிராட் ஹடின், ஸ்டூவர்ட் கிளார்க், ப்ரிஸ் மெக்கைன், காலும் பெர்குசன், கேமரூன் ஒயிட், ஜார்ஜ் ஹார்ட்லின், ஜேசன் கேரேஜ்சா, ஜான் ஹஸ்டிங்ஸ், டிர்க் நானிஸ், நாதன் ரியர்டான், சாட் சாயேர்ஸ்

- Advertisement -

இலங்கை லெஜெண்ட்ஸ்: திலகரத்ன டில்சான் (கேப்டன்), கௌசல்யா வீரரத்னே, மகிலா உடவட்டே, ரமேஷ் சில்வா, அசெலா குணரத்னே, சமரா சில்வா, இசுரு உதானா, சமிந்தா வாஸ், சமரா கப்புகேந்திரா, சதுரங்க டி சில்வா, தம்மிகா பிரசாத், சின்தக்கா ஜெயசிங்கே, ஜீவன் மென்டிஸ், இஷான் ஜெயரத்னே, தில்ஷான் முனவீரா, டில்ருவான் பெரேரா, நுவான் குலசேகரா, சனத் ஜெயசூரியா, உபுல் தரங்கா, திசாரா பெரேரா.

இங்கிலாந்து லெஜெண்ட்ஸ்: இயன் பெல் (கேப்டன்), நிக் காம்ப்டன், பில் முஸ்டர்ட், கிறிஸ் ட்ரெம்லெட், டேரன் மேடி, மால் லோயி, ஜெட் டென்பிரிச், ஸ்டீபன் பாரி, ரிக்கி கிளார்க், ஜேம்ஸ் டின்டால், டிம் அம்ப்ரோஸ், டிமிர்த்தி மஸ்கிரனேஷ், கிறிஸ் ஸ்கோபீல்டு

வெஸ்ட்இண்டீஸ் லெஜெண்ட்ஸ்: பிரைன் லாரா (கேப்டன்), டான்சா ஹைட், தேவேந்திர பிசூ, ட்வயன் ஸ்மித், ஜெரோம் டெய்லர், க்ரிக் எட்வர்ட்ஸ் மார்லான் இயன் ப்ளாக், நரசிங் டியோநரேன், வில்லியம் பெர்கின்ஸ், டேரன் போவல், சுலைமான் பென், டாரியோ பர்த்லி, தேவ் முகமத், கிறிஸ்மர் சந்தோக்கி

தென்ஆப்பிரிக்க லெஜெண்ட்ஸ்: ஜான்டி ரோட்ஸ் (கேப்டன்) ஆல்விரோ பீட்டர்சன், ஆண்ட்ரூ புடிக், எடி லீ, ஜேக் ரூடோல்ப், ஹென்றி டேவிட்ஸ், க்ரானட் க்ரூஜர், ஜோகன் போத்தா, வன் டெர் வாத், லன்ஸ் க்ளூஸ்னர், மகாயா நிடினி, வேர்னன் ஃபிளாந்தர், நோரிஸ் ஜோன்ஸ், மோர்னே வன் விக், சண்டர் டீ ப்ருன், சபலாலா

இதையும் படிங்க : கோபத்தை ஹாங்காங்கிடம் காட்டிய பாக், பிரம்மாண்ட சாதனை வெற்றியுடன் அடுத்த சுற்றுக்கு தகுதி – என்ன நடந்தது?

வங்கதேசம் லெஜெண்ட்ஸ்: ஷாகாடட் ஹொசைன் (கேப்டன்), அப்துர் ரசாக், அலகிர் கபீர், அப்டப் அஹமத், அலோக் கபாலி, மாமுன் உர் ரசித், கலில் மசூத், டாலர் மகமுத், டிமன் கோஷ், நஸ்முஸ் சடட், முஹம்மது சாரிப், மெக்ரப் ஹொசைன், எளிஸ் சன்னி, துஷார் இம்ரான், அப்துல் ஹஸன், முகமத் நசீம்முடின்

Advertisement