இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் – வெளியான புதிய செய்தி

Avesh-Khan
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் பரபரப்பான தருணங்களுக்கு பின் 2 – 2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. ஜூன் 9இல் தலைநகர் டெல்லியில் துவங்கிய இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் வெறித்தனமாக சேஸிங் செய்து அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற தென் ஆப்பிரிக்கா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று சவாலை கொடுத்தது. அந்த சவாலை அடுத்த 2 போட்டிகளில் சமாளித்த ரிஷப் பண்ட் தலைமையிலான இந்திய அணியினர் பந்து வீச்சிலும் பேட்டிங்கிலும் அபாரமாக செயல்பட்டு பெரிய வெற்றிகளைப் பெற்று தென்னாபிரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்தனர்.

IND vs RSA Rishabh Pant Keshav Maharaj

- Advertisement -

ஆனால் பெங்களூருவில் நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 5-வது போட்டி மழையால் வெறும் 21 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் ரத்து செய்யப்பட்டது. அதனால் இந்த தொடரின் வெற்றியாளர்களாக இரு அணிகளும் அறிவிக்கப்பட்டு கோப்பை பகிர்ந்து பரிசளிக்கப்பட்டது. இதையடுத்து அயர்லாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வரும் ஜூன் 26, 28 ஆகிய தேதிகளில் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் இந்தியா அடுத்த 2 நாட்களில் அதாவது ஜூலை 1-ஆம் தேதி கடந்த வருடம் கிடப்பில் போட்டு வந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் களமிறங்க வேண்டியுள்ளது.

2 இந்திய அணிகள்:
ஆனால் 2 நாள் கால இடைவெளிக்குள் அயர்லாந்துகும் இங்கிலாந்துக்கும் இந்திய அணியினர் பயணிப்பதற்கே நேரம் போதாது. எனவே அயர்லாந்துக்கு எதிராக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஐபிஎல் 2022 கோப்பையை வென்ற ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் 2-வது தர இந்திய அணியும் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் அடங்கிய முதன்மை அணியும் தனித்தனியாக தேர்வு செய்யப்பட்டு சமீபத்தில் அறிவிப்பட்டது. இதில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக ஏற்கனவே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்று தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

Dinesh Karthik and Hardik Pandya

அதேபோல் தென் ஆப்பிரிக்க தொடரை முடித்துள்ள இளம் இந்திய அணி இன்னும் ஓரிரு நாட்களில் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் தலைமையுடன் அயர்லாந்துக்கு பறக்க உள்ளது. அந்த அணியில் தென் ஆப்ரிக்க தொடரில் வாய்ப்பு பெறாத சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி ஆகியோருடன் உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் போன்ற இளம் வீரர்களும் தினேஷ் கார்த்திக், புவனேஸ்வர் குமார் போன்ற சீனியர் வீரர்களும் இடம் பிடித்துள்ளனர். தென்னாப்ரிக்க தொடரில் வாய்ப்பு பெறாத உம்ரான் மாலிக் போன்ற வீரர்கள் அந்த தொடரில் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சாத்தியமில்லை:
இந்நிலையில் ஜூலை 1-ஆம் தேதி துவங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஜூலை 5-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. ஆனால் அடுத்த ஒருநாள் இடைவெளியில் அதாவது ஜூலை 7-ஆம் தேதி அதே இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி சௌதம்டன் நகரில் துவங்குகிறது. அந்த ஒருநாள் இடைவெளியில் டெஸ்ட் போட்டியை முடித்துக் கொண்டு ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற முதன்மையான இந்திய அணியினர் டி20 தொடரில் பங்கேற்பது சாத்தியமற்றதாகும். அதனால் அயர்லாந்துக்கு எதிராக பாண்டியா தலைமையில் விளையாடும் அதே இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக டி20 தொடரில் களமிறங்க உள்ளதாக புதிய தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

ind vs eng

மறுபுறம் அதற்கு தயாராக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு பதிலாக இயன் மோர்கன் தலைமையில் பட்லர் போன்ற வீரர்கள் அடங்கிய மற்றொரு இங்கிலாந்து அணி பாண்டியா தலைமையிலான இந்தியாவை சந்திக்க தயாராக உள்ளது. அதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தும் வகையில் இங்கிலாந்து டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே ஜூலை 1 மற்றும் 3 ஆகிய தேதிகளில் டெர்பிஷைர் மற்றும் நார்த்தம்டன்ஷைர் ஆகிய 2 கவுண்டி அணிகளுக்கு எதிராக 2 பயிற்சி டி20 போட்டியில் இந்தியா விளையாட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதை உறுதிப்படுத்தும் வகையில் பிசிசிஐ நிர்வாகி ஒருவர் பேசியது பின்வருமாறு. “பர்மிங்காமில் 5-வது டெஸ்ட் போட்டி ஜூலை 1 – 5 வரை நடைபெற உள்ளது. அதேசமயம் அடுத்த 2 நாட்களில் ஜூலை 7இல் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியும் தொடங்குகிறது. எனவே அந்தக் குறுகிய காலத்தில் டெஸ்ட் மற்றும் டி20 அணியில் வீரர்கள் மாறுவது மிகவும் கடினமாகும்”

இதையும் படிங்க : வெறும் 100 ரூபாய் இருந்தா போதும். தமிழக ரசிகர்களை திக்கு முக்காட வைத்த – டி.என்.பி.எல் அறிவிப்பு

“அதுபோன்ற சூழ்நிலையில் அயர்லாந்துக்கு எதிராக விளையாடும் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக விளையாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட உள்ளது. ஏனெனில் அங்கும் அவர்கள் டி20 போட்டியில் தான் விளையாடுவார்கள். சொல்லப் போனால் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடும் போதே உள்ளூர் அணிக்கு எதிராக 2 பயிற்சிப் போட்டியில் இந்தியா விளையாட உள்ளது” என்று கூறினார்.

Advertisement