விராட் கோலி இன்னும் 2 வருஷம் வெயிட் பண்ணியிருக்கலாம். அவசரப்பட்டுடாரு – ரவி சாஸ்திரி ஓபன்டாக்

shastri
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பைத் தொடரோடு டி20 கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் பதவியை துறந்தார். அதனை தொடர்ந்து நடைபெற்று முடிந்த தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் அறிவிக்கப்பட்டபோது பிசிசிஐ அவரை வலுக்கட்டாயமாக ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து வெளியேற்றியது. ஆனால் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

அவ்வேளையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்த பிறகு அந்த கேப்டன் பதவியில் இருந்தும் கோலி வெளியேறினார். 2014ஆம் ஆண்டு தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனான விராட் கோலி அடுத்த 5 ஆண்டுகள் மிகச்சிறப்பாக இந்திய அணியை வழிநடத்தி நம்பர் ஒன் அணியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வலம்வரச் செய்தார்.

அவரது தலைமையில் இந்திய டெஸ்ட் அணி 68 போட்டிகளில் 40 வெற்றிகளை பெற்றுள்ளது. அது மட்டுமின்றி வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களிலும் வெற்றி பெற்ற கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அசைக்க முடியாத அணியாக திகழ்ந்து வந்தது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்ததால் பி.சி.சி.ஐ யும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு வேறு கேப்டன் குறித்து யோசிக்காமல் இருந்தது.

shastri

ஆனால் திடீரென கேப்டன் பதவியில் இருந்து கோலி வெளியேறி தற்போது முழுநேர பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்த கோலியின் இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றாலும் அவர் எடுத்த முடிவுக்காக அனைவரும் அவரை வாழ்த்தினர். இந்நிலையில் கோலியுடன் நெருங்கி பணியாற்றிய இந்திய முன்னாள் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி அவரது இந்த கேப்டன்சி சகாப்தம் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

என்னைப் பொறுத்தவரை நிச்சயம் இன்னும் இரண்டு ஆண்டுகள் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் அணியை வழிநடத்தி இருக்க வேண்டும். ஏனெனில் அவரது தலைமையில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தது. 40 டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றுள்ள கோலி இன்னும் 2 ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்பட்டு இருக்கும் பட்சத்தில் 50 முதல் 60 வெற்றிகளை பெற்று இருப்பார். ஆனால் அதனை பலரால் ஜீரணிக்க முடியவில்லை.

இதையும் படிங்க : எவ்ளோ போராடியும் கடைசில தோத்துட்டோமே. தோல்வியை நினைத்து கண்ணீர் விட்ட – இந்திய வீரர்

இதன் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் இருப்பினும் அவரது தனிப்பட்ட முடிவை அனைவரும் மதிக்க வேண்டுமென ரவிசாஸ்திரி கூறினார். ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோலி ஆகியோரது கூட்டணியில் இந்திய அணி ஐசிசி கோப்பையை கைப்பற்றவில்லை என்றாலும் மற்றபடி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது என்றே கூறலாம்.

Advertisement