எவ்ளோ போராடியும் கடைசில தோத்துட்டோமே. தோல்வியை நினைத்து கண்ணீர் விட்ட – இந்திய வீரர்

Deepak-1
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி நேற்று கேப்டவுன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி டிகாக்கின் அபார சதம் வேண்டர்டுசைன் மற்றும் மில்லர் ஆகியோரது ஆட்டத்தினால் 50 ஓவர்கள் முடிவில் 287 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்திலேயே ராகுலின் விக்கெட்டை இழந்து இருந்தாலும் அடுத்து தவான் மற்றும் விராட் கோலி ஆகியோரது பாட்னர்ஷிப் நல்ல நிலைக்கு கொண்டு சென்றது சென்றது 22 ஓவர்களில் 116 ரன்களில் இருந்த போது தவான் ஆட்டமிழந்து வெளியேறினார்.

De-kock-1

- Advertisement -

அதனை தொடர்ந்து ரிஷப் பண்ட் மீண்டும் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேற இந்திய அணி சிக்கலை சந்தித்தது. பின்னர் கோலி ஒருவழியாக 65 ரன்கள் குவித்து ஆட்டம் இருந்து வெளியேறிய இந்திய அணி 31.4 ஓவர்களில் 156 எங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது இந்திய அணி வெற்றி பெறுமா? என்ற பரபரப்பு ஏற்பட்டது.

அவ்வேளையில் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் அய்யர் 26 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 39 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் ஏழாவது வீரராக களமிறங்கிய வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 34 பந்துகளை சந்தித்த அவர் 5 பவுண்டரி 2 சிக்சர்கள் என 54 ரன்கள் குவித்தார்.

deepak 2

ஒரு கட்டத்தில் இவர் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தீபக் சாகர் ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது 17 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்பதனால் இந்திய அணி எப்படியாவது வெற்றி பெற்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

அவ்வேளையில் அடுத்தடுத்து பிரசித் கிருஷ்ணா மற்றும் சாகல் ஆகியோரும் ஆட்டம் இருந்து வெளியேறியதால் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. எப்படியும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இறுதியில் சிறிய இடைவெளியில் தோற்றதை நினைத்து சிறப்பாக பேட்டிங் செய்த தீபக் சாகர் மைதானத்திலேயே அமர்ந்து கண்கலங்கி விட்டார்.

deepak

மேலும் தான் வெற்றி அருகில் அழைத்துச் சென்றும் வெற்றிபெற வேண்டிய இந்த ஆட்டத்தை தவற விட்டுவிட்டோமே என்ற வருத்தத்தில் அவர் முகம் வாடியதை கேமராக்களும் காண்பித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement