கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் தொடரிலும் அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது லீக் சுற்று போட்டிகளில் தாங்கள் விளையாடிய 14 ஆட்டங்களில் 9 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தினை வகிக்கிறது. இந்த ஆண்டு ஆர்.சி.பி அணியின் சிறப்பான செயல்பாடு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எங்களுடைய அணியின் பலமே இவர்கள் தான் : ரஜத் பட்டிதார்
இவ்வேளையில் லீக் சுற்றுப்போட்டியின் முடிவில் முதல் அணியாக தகுதி பெற்ற ஆர்.சி.பி அணி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக இன்று தரம்சாலா நகரில் நடைபெற இருக்கும் முதலாவது குவாலிபயர் போட்டியில் விளையாட இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் அங்கு தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் எனவே இவ்விரு அணிகளுக்குமே இன்றைய போட்டி மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. இவ்வேளையில் குவாலிபயர் 1 போட்டியில் விளையாட இருப்பதற்கு முன்னதாக ஆர்.சி.பி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
இந்த சீசனில் இரு அணிகளுமே சிறப்பாக விளையாடியுள்ளன. குறிப்பிட்ட நாளில் எந்த அணி தங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்துகிறதோ அந்த அணியே வெற்றி பெறும். இந்த அழுத்தமான போட்டியிலும் நாங்கள் நிதானமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. எங்களது அணியின் மிகப்பெரிய பலமே பந்துவீச்சு துறை தான்.
இதையும் படிங்க : 2 ஆவது முறையாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே.எல் ராகுல் நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ
எங்களுடைய பவுலர்கள் பவர்பிளேவில் ரன்களை விட்டு கொடுத்தாலும் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற ஆக்ரோஷமான மனநிலையுடன் பந்துவீசி வருகின்றனர். நிச்சயம் இந்த போட்டியிலும் விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சிப்போம். இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு செல்வோம் என்று நம்புவதாக ரஜத் பட்டிதார் கூறியது குறிப்பிடத்தக்கது.



