இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விக்கெட் கீப்பராகவும், துவக்க ஆட்டக்காராகவும் விளையாடிய கே.எல் ராகுல் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறார். ஏனெனில் இந்த தொடரின் போது ஒரு முக்கிய ஆட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட ரன்களை விளாசி ஐ.பி.எல் போட்டிகளில் முதல் முறையாக 150-க்கு மேல் ரன்களை விளாசிய இந்திய வீரராக சாதனை நிகழ்த்தினார்.
கே.எல் ராகுல் நிகழ்த்திய சாதனை :
அதோடு அடுத்தடுத்த போட்டிகளிலும் அவர் தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் இந்த ஆண்டு டெல்லி கேபிட்டல்ஸ் அணி கடைசியாக விளையாடிய கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் போது முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி சார்பாக துவக்க வீரராக களமிறங்கிய கே.எல் ராகுல் :
30 பந்துகளில் 5 பவுண்டல் மற்றும் 4 சிக்ஸர் என 60 ரன்கள் குவித்து ஐ.பி.எல் கரியரில் தனது 45-வது அரை சதத்தை பதிவு செய்திருந்தார். இவ்வேளையில் இந்த நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக விளையாடியதன் மூலம் இரண்டாவது முறையாக ஐ.பி.எல் போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினை கே.எல் ராகுல் நிகழ்த்தியுள்ளார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : கொல்கத்தா அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் அவர் அடித்த அரை சதத்தோடு சேர்த்து இந்த 2026 சீசனில் மட்டும் ஆறாவது 50+ ரன்களை கே.எல் ராகுல் பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க : 4 பேரில் யார் ஜெயிச்சாலும் வரலாறு படைக்கப்போறது உறுதி.. சுவாரசிய கட்டத்தை எட்டிய – 2026 ஐ.பி.எல்
ஏற்கனவே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஐ.பி.எல் தொடரின் ஒரு சீசனில் ஆறு அரை சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக ரிஷப் பண்ட் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் இருக்கின்றனர். இருந்தாலும் அதை இரண்டு முறை செய்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ராகுல் முதல் முறையாக சாதனை நிகழ்த்தியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் 6 அரைசதம் அடித்திருந்த அவர் தற்போது 2026-லும் 6 முறை 50+ ரன்களை அடித்து வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



