விமர்சனங்களுக்கு மத்தியில் மீண்டும் வாய்ப்பு பெற்ற ஸ்டீபன் பிளமிங்.. தோனி தான் சப்போர்ட்டாம் – வெளியான தகவல்

Stephen Fleming and MS Dhoni
- Advertisement -

ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை கோப்பையை வென்ற அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கடைசியாக 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. அதன்பின்னர் நடைபெற்ற மூன்று தொடர்களிலும் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள சென்னை அணி பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. சென்னை அணியின் இந்த மோசமான செயல்பாடு ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரியளவில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

2027 ஐ.பி.எல் தொடரின் சி.எஸ்.கே பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் நீட்டிப்பு :

அதிலும் குறிப்பாக கடந்த 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் போது புள்ளி பட்டியலில் பத்தாம் இடத்தைப் பிடித்து வரலாற்றிலேயே முதல் முறையாக கடைசி இடத்தை பிடித்து வெளியேறிய சென்னை அணி நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி எட்டாம் இடத்தை பிடித்து வெளியேறியது. தொடர்ந்து சி.எஸ்.கே அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெறாமல் இருந்து வருவது நிர்வாகத்தினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

- Advertisement -

ஏற்கனவே 2026 ஐ.பி.எல் தொடரானது நடைபெற்று வந்தபோது முன்னாள் வீரர்கள் பலரும் சென்னை அணி மட்டுமே ஐ.பி.எல் போட்டிகளில் அதிரடி காட்டாமல் மிகப் பொறுமையாக விளையாடி வருவதாகவும், ஸ்டீபன் பிளமிங் பயிற்சியாளராக இருக்கக் கூடாது என்றும் நவீன காலத்திற்கு ஏற்றவாறு அதிரடியான புதிய பயிற்சியாளரை கொண்டுவர வேண்டும் என்ற விமர்சனங்களையும் முன்வைத்திருந்தனர்.

இவ்வேளையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2027 ஐ.பி.எல் தொடருக்கான பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங்கை சி.எஸ்.கே அணியின் நிர்வாகம் தற்போது நியமித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் ஸ்டீபன் பிளமிங் இப்படி அடுத்த ஆண்டும் பயிற்சியாளராக நீடிக்க தோனிதான் காரணம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் சென்னை அணியின் ஆரம்ப கட்டத்தில் இருந்து பயிற்சியாளராக இருக்கும் ஸ்டீபன் பிளமிங்குக்கும், முன்னாள் கேப்டனான தோனிக்கும் இடையே மிகவும் பலமான நட்பு இருக்கிறது. இதன் காரணமாகவே அவர் பயிற்சியாளராக நீடிக்க தோனி விருப்பம் தெரிவித்து ஆதரவு தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. தோனியின் வேண்டுகோளுக்கு இணங்கவே பிளமிங் பயிற்சியாளராக தொடர்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : நான் பேட்டை கையில் எடுத்ததே இதற்காகத்தான்.. என் கனவு நிறைவேறியுள்ளது – வைபவ் சூர்யவன்ஷி நெகிழ்ச்சி

ஏற்கனவே ஐ.பி.எல் போட்டிகளில் மற்ற அணிகள் புதிய பயிற்சியாளர்களை கொண்டு வந்து முழு கட்டமைப்பை மாற்றி வரும் வேளையில் சென்னை அணி தொடர்ந்து ஸ்டீபன் பிளமிங்கை நீடிக்க வைத்து வருவது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. நவீன டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு ஏற்றவாறு புதிய யோசனைகளுடன் வரும் பயிற்சியாளரை நியமிக்க வேண்டும் என்ற கருத்துக்களும் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement