இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 69-வது லீக் போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றன. அதன்படி நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்துமா ராஜஸ்தான்? :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக துருவ் ஜுரேல் 38 ரன்களையும், ஜோப்ரா ஆர்ச்சர் 32 ரன்களையும் குவித்தனர். பின்னர் 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியானது விளையாடி வருகிறது.
இந்த இறுதி லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்துடன் ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. ஏனெனில் ஏற்கனவே 2026 ஐ.பி.எல் தொடருக்கான பிளே ஆப் சுற்றுக்கு ஆர்.சி.பி, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களை பிடித்து தங்களது இடத்தை உறுதிசெய்தது.
இவ்வேளையில் நான்காவது இடத்தில் தற்போது பஞ்சாப் 15 புள்ளிகளுடன் இருக்கிறது. இந்நிலையில் இன்றைய போட்டியில் மும்பை அணியை வீழ்த்தினால் மட்டுமே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் பிளே ஆப் வாய்ப்பை 16 புள்ளிகளுடன் உறுதி செய்ய முடியும். ஒருவேளை இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தால் அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லவே முடியாது.
இதையும் படிங்க : 4 ஐ.பி.எல் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நிகழ்த்திய அசத்தல் சாதனை – விவரம் இதோ
இறுதியில் பஞ்சாப் மற்றும் கே.கே.ஆர் அணிகளுக்கு இடையே ரன் ரேட் அடிப்படையில் நான்காவது இடத்திற்கான போட்டி இருக்கும் எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்துடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது.



