4 ஐ.பி.எல் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நிகழ்த்திய அசத்தல் சாதனை – விவரம் இதோ

Shreyas Century
- Advertisement -

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 68-வது லீக் போட்டியில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது வாழ்வா? சாவா? என்கிற இக்கட்டான நிலையில் விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது ஏதாவது வெற்றியை பதிவு செய்தது. அதோடு இந்த தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் தங்கள் வாய்ப்பையும் உயிர்ப்புடன் வைத்துள்ளது.

4 ஆவது ஐ.பி.எல் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நிகழ்த்திய சாதனை :

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை குவித்தது. லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக ஜாஸ் இங்கிலீஷ் 72 ரன்களையும், ஆயுஷ் பதோனி 43 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 18 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 101 ரன்களையும், பிரப்சிம்ரன் சிங் 69 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இந்த போட்டியின் போது 51 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர் என 101 ரன்கள் அடித்து தனது முதலாவது ஐ.பி.எல் சதத்தை பதிவு செய்த ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அவர் நேற்று அடித்த இந்த சதத்தின் மூலம் குறிப்பிட்ட சில முக்கிய சாதனைகளுக்கும் சொந்தக்காரராக மாறியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :

- Advertisement -

இதையும் படிங்க : தோத்தாலும் தலை நிமிர்ந்து செல்வோம்.. பஞ்சாப் அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – ரிஷப் பண்ட் பேசியது என்ன?

ஏற்கனவே பஞ்சாப் அணிக்காக கே.எல் ராகுல் மற்றும் கில்கிறிஸ்ட் ஆகியோர் கேப்டனாக சதம் அடித்திருந்த வேளையில் பஞ்சாப் அணிக்காக சதம் அடிக்கும் மூன்றாவது கேப்டன் என்ற பெருமையை ஷ்ரேயாஸ் ஐயர் பெற்றார். அதோடு ஐ.பி.எல் போட்டிகளில் சேசிங்கில் சதம் அடித்த கேப்டனாக விராட் கோலி, சேவாக், சஞ்சு சாம்சன் ஆகியோர் இருந்த வேளையில் தற்போது நான்காவது கேப்டனாக அந்த பட்டியலில் ஷ்ரேயாஸ் ஐயர் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement