சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்று இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. இதன்மூலம் 2007, 2024 மற்றும் 2026 என மூன்று டி20 உலக கோப்பை வென்று அதிகமுறை டி20 உலக கோப்பையை வென்ற அணியாக சாதனை நிகழ்த்தியது.
இஷான் கிஷனுக்கு பரிசுத்தொகையை அறிவித்த பீஹார் மாநில அரசு :
அதோடு 2024 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்ற பின்னர் தற்போது சூரியகுமார் தலைமையிலான இந்திய டி20 அணியும் கோப்பையை வென்று அடுத்தடுத்த கோப்பைகளை கைப்பற்றிய முதல் அணியாகவும் சாதனையை நிகழ்த்தியது.
இந்த தொடரில் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் வீரர்களுக்கு ஏற்கனவே பி.சி.சி.ஐ சார்பில் பெரிய பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இந்த இந்திய அணியில் இடம் பிடித்திருந்த பல்வேறு வீரர்களுக்கும் அந்தந்த மாநில அரசுகளின் சார்பாக பெரிய பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வேளையில் டி20 உலக கோப்பை தொடர் முடிந்து சில மாதங்கள் கழித்து இந்திய அணியில் இடம் பிடித்திருந்த இளம் இடதுகை ஆட்டக்காரரான இஷான் கிஷனுக்கு பீகார் மாநில அரசு ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகையை வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டதாவது : டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்ட இஷான் கிஷனுக்கு வாழ்த்துக்கள்.
இதையும் படிங்க : இந்திய டி20 அணிக்கு இவரை கேப்டனா போடுங்க.. ஷ்ரேயாஸ் ஐயர் வேணாம் – ரவி சாஸ்திரி ஓபன்டாக்
அதோடு அவருடைய செயல்பாட்டிற்காக ஒரு கோடி ரூபாய் காசோலையை தாங்கள் வழங்குவதாகவும் பீகார் முதல் மந்திரி சாம்ராட் சவுத்ரி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தின் நவாடா மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் இஷான் கிஷன் என்பதால் அம்மாநில அரசு அவருக்கு இந்த பரிசு தொகையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



