இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அடுத்தடுத்து இரண்டு டி20 உலக கோப்பை தொடரை வென்ற அணியாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை நிகழ்த்தியிருந்தது. இந்த டி20 தொடரை பொருத்தவரை இந்திய அணி நடப்பு சாம்பியனாக பங்கேற்று மிகச் சிறப்பாக விளையாடி இருந்தாலும் கேப்டன் சூர்யகுமார் யாதவின் செயல்பாடு பலரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியது.
இந்திய அணிக்கு இவரை கேப்டனாக்குங்க : ரவி சாஸ்திரி
ஏனெனில் நடைபெற்று முடிந்த அந்த தொடரில் அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியை தவிர மற்ற போட்டியில் அவர் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். அதோடு தற்போது 35 வயதான அவரை நீக்கிவிட்டு புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகிறது. அதனால் டி20 இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் நிகழவும் வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது.
இன்னும் அடுத்த டி20 உலக கோப்பைக்கு இரண்டு ஆண்டுகள் இருப்பதால் நிச்சயம் புதிய கேப்டன் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அந்த வரிசையில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட ஷ்ரேயாஸ் ஐயர் சரியாக இருப்பார் என்று பலரும் கூறி வருகின்றனர். ஏனெனில் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக அற்புதமான கேப்டன்சி செய்து வரும் அவர் இந்திய அணியின் கேப்டனாக மாறலாம் என்று பலரும் கூறி வருகின்றனர்.
இவ்வேளையில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி ஷ்ரேயாஸ் ஐயரை விட சஞ்சு சாம்சனுக்கு கேப்டன் பதவி வழங்கினால் சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவருக்கு கூறுகையில் : நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரின் ஆரம்ப கட்டத்தில் மோசமான ஆட்டத்தை சஞ்சு சாம்சன் வெளிப்படுத்திருந்தாலும் பிற்பதியில் அற்புதமான செயபாட்டை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க : வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய அணியில் இடம் வழங்கிய பி.சி.சி.ஐ – காரணம் என்ன?
அதோடு தற்போது சி.எஸ்.கே அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் அவர் ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பல ஆண்டுகாலம் வழிநடத்தியவர் என்பதனால் இந்திய டி20 அணியும் அவர் வழிநடத்த வாய்ப்பு வழங்கினால் அது சரியாக இருக்கும் என ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.



