வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய அணியில் இடம் வழங்கிய பி.சி.சி.ஐ – காரணம் என்ன?

Vaibhav Suryavanshi
- Advertisement -

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி 14 வயதில் ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகமானதோடு மட்டுமின்றி அதே தொடரில் சதம் அடித்து மிக இளம் வயதில் ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகமான வீரர் மட்டுமின்றி இளம் வயதில் சதம் அடித்த வீரராகவும் சாதனையை நிகழ்த்தியிருந்தார். அதன்பின்னர் 19 வயதுக்கு உட்பட்டோர் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்ட அவர் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் போதும் இறுதிப்போட்டியில் அசத்தலான சதத்தை விளாசியிருந்தார்.

இந்திய ஏ அணியில் இடம்பிடித்த வைபவ் சூர்யவன்ஷி :

இப்படி தனக்கு கிடைத்த அடுத்தடுத்த வாய்ப்புகளில் பிரமாதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் தற்போது 2026 ஐ.பி.எல் தொடரிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதன்மை வீரராக விளையாடி வருகிறார். இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்து உலகின் நட்சத்திர பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் பிரம்மாண்டமான சிக்ஸர்களையும் விளாசி வருகிறார்.

- Advertisement -

இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள வைபவ் சூர்யவன்சி 400-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ள வேளையில் அவரை விரைவில் சர்வதேச போட்டிகளில் விளையாட இந்திய அணிக்கு தேர்வு செய்ய வேண்டும் என்று பலரும் கூறி வந்தனர். இவ்வேளையில் முதல் முறையாக பிசிசிஐ தற்போது ஜூன் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஏ அணியில் வைபவ் சூரியவன்ஷியை சேர்த்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் விரைவில் அவர் இந்திய அணிக்காக சர்வேச போட்டிகளிலும் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஒருபுறம் இப்படி வைபவ் சூர்யவன்ஷிக்கு பி.சி.சி.ஐ வாய்ப்பு கொடுத்தது சரிதான் என்று சிலர் கூறிவரும் நிலையில் இவ்வளவு இளம் வீரரை சர்வதேச போட்டிகளில் விளையாட வைத்து அழுத்தத்தை கொடுக்கக் கூடாது என சிலர் கூறி வருகின்றனர். ஆனாலும் இலங்கை தொடரில் அவர் அசத்தும் பட்சத்தில் நிச்சயம் அவர் சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : உலககோப்பை தொடரில் விளையாடியது எனக்கு இங்க ஹெல்ப் பண்ணுச்சு – திலக் வர்மா நெகிழ்ச்சி

வரும் ஜூன் 9 தேதி முதல் ஜூன் 21-ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொடரில் இந்தியா ஏ, இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ ஆகிய மூன்று அணிகள் விளையாட இருக்கின்றன. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக திலக் வர்மாவும், துணை கேப்டனாக ரியான் பராக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement