விராட் கோலிக்கு அடுத்து 2 ஆவது இந்திய வீரராக டி20 போட்டிகளில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய – ரோஹித் சர்மா

Rohit Sharma
- Advertisement -

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ராய்ப்பூர் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 58-வது லீக் போட்டியில் விளையாடியிருந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரரான ரோகித் சர்மா 26 பந்துகளை சந்தித்து 2 சிக்சர்களுடன் 25 ரன்கள் எடுத்த நிலையில் யுஸ்வேந்திர சாஹலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் அடித்த இந்த 25 ரன்கள் மூலம் ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் விராட் கோலிக்கு அடுத்து மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

இரண்டாவது இந்திய வீரராக ரோஹித் சர்மா நிகழ்த்திய சாதனை :

அது குறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஐபிஎல் வரலாற்றில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற கேப்டனான ரோகித் சர்மா தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் முதன்மை துவக்க வீரராக விளையாடி வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியின் போது அவர் 9 ரன்களை தொட்ட வேளையில் ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் 12,500 ரன்கள் பூர்த்தி செய்தார். இவருக்கு முன்னதாக விராட் கோலி ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் 14027 ரன்களை அடித்துள்ள வேளையில் அவருக்கு அடுத்து 12,500 ரன்கள் தொட்ட இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா நிகழ்த்தியுள்ளார்.

அதோடு ஐ.பி.எல் போட்டிகளை பொறுத்த வரை இதுவரை 279 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2 சதம் மற்றும் 49 அரைசதம் என 7,300 க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை விராட் கோலி 9000-க்கும் மேற்பட்ட ரன்களுடன் முதலிடத்தில் இருக்கும் வேளையில் அவருக்கு அடுத்து ரோகித் சர்மா 7300-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : மும்பை அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ஜஸ்ப்ரீத் பும்ரா.. சூரியகுமார் யாதவுக்கு என்ன ஆச்சு? – விவரம் இதோ

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவது ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement