இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 58-வது லீக் போட்டியானது தரம்சாலா நகரில் மே 14-ஆம் தேதியான இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன. அதன்படி நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற மும்பை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
சூர்யகுமார் யாதவ் ஏன் விளையாடவில்லை? :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்துள்ளது. பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக ப்ரப்சிம்ரன் சிங் 57 ரன்களையும், அஸ்மத்துல்லா ஓமர்சாய் 38 ரன்களையும் குவித்தனர். அதனை தொடர்ந்து தற்போது 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியானது விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை அணி டாசுக்கு வருகையில் ஜஸ்ப்ரீத் பும்ரா கேப்டனாக வந்தது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் ஏற்கனவே கேப்டனாக இருந்த ஹார்டிக் பாண்டியா காயம் காரணமாக கடந்த சில போட்டிகளாக விளையாட முடியாத நிலையில் சூரியகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தி வந்தார்.
இந்நிலையில் இன்றைய போட்டியில் சூரியகுமார் யாதவ் விளையாடாத வேளையில் பும்ரா முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார். இப்படி சூரியகுமார் யாதவ் திடீரென அணியிலிருந்து விலகுவதற்கு என்ன காரணம்? என்பது குறித்தும் ஜஸ்ப்ரீத் பும்ரா பதிலளித்திருந்தார் அந்த வகையில் : சூரியகுமார் யாதவ் தனது சொந்த காரணங்களால் இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளதாலே தான் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளேன் என்றும் கூறியிருந்தார்.
இதையும் படிங்க : எம்.எஸ் தோனி மற்றும் ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி – விவரம் இதோ
அதோடு மும்பை இந்தியன்ஸ் கேப்டனாகும் முன்பே இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக செயல்படுவேன் என்று தான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்றும் 19 வயதில் இந்த அணியில் நுழைந்து நான் தற்போது கேப்டனாக மாறியதில் மகிழ்ச்சி என்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.



