யாரை யூஸ் பண்றதுன்னு குழப்பமே வந்துடுச்சி.. தோல்விக்கு பிறகு மிட்சல் மார்ஷை பாராட்டிய – ரஜத் பட்டிதார்

Rajat Patidar
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 50-ஆவது லீக் போட்டியானது நேற்று லக்னோ நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து லக்னோ அணி விளையாடுகளில் போட்டியின் இடையே அடிக்கடி மழை குறைக்கிட்டதால் ஆட்டம் 19 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

லக்னோ அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு : ரஜத் பட்டிதார் பேட்டி

அதனை தொடர்ந்து விளையாடிய லக்னோ அணியானது நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களை குவித்தது. அதனை தொடர்ந்து 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணியானது லக்னோ அணியின் சிறப்பான பந்துவீச்சுக்கு எதிராக 19 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 9 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய ஆர்.சி.பி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறியதாவது : இந்த டார்கெட்டை எங்களால் எப்படி கடக்க முடியும் என்பது தெளிவாக எங்களிடம் திட்டத்தில் இருந்தது. அதற்கேற்றார் போல் எங்களது அணியின் வீரர்களும் மிகச்சிறப்பாகவே விளையாடியிருந்தனர். இன்னும் ஒன்று அல்லது இரண்டு பவுண்டரிகள் வந்திருந்தால் வெற்றி கிடைத்திருக்கும்.

இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக இருந்தது. குறிப்பாக பந்து பேட்டுக்கு வந்ததால் அதிரடியாகவும் விளையாட முடிந்தது. ஆனாலும் இந்த தோல்வி எங்கிருந்து வந்தது என்பதை தற்போது யோசிக்க முடியவில்லை. இந்த தோல்வி குறித்து யோசிக்க சில நேரங்கள் தேவைப்படும் இன்னும் நான்கு ஆட்டங்கள் எங்களுக்கு மீதம் இருக்கிறது. எனவே இனிவரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பாதைக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ஆர்.சி.பி அணியை அடித்து நொறுக்கி கே.எல் ராகுலின் சாதனையை சமன் செய்த மிட்சல் மார்ஷ் – விவரம் இதோ

இந்த போட்டியில் மிட்சல் மார்ஷ் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். அதிலும் குறிப்பாக அவர் அதிரடியாக விளையாடிய வேளையில் பவர்பிளே ஓவர்களுக்கு பிறகு யாரை நாங்கள் பயன்படுத்த போகிறோம்? என்ற குழப்பத்தையே ஏற்படுத்திவிட்டார். அந்த அளவிற்கு அவர் பவுலர்களின் மீது ஆதிக்கத்தை செலுத்தி விளையாடியிருந்தார். அவரது இந்த இன்னிங்ஸ் பார்ப்பதற்கு அற்புதமாக இருந்ததாகவும் ரஜத் பட்டிதார் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement