கடந்த மார்ச் 28-ஆம் தேதி இந்தியாவில் துவங்கிய நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான 19-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது தற்போது பிளே ஆப் சுற்றை நோக்கி நெருங்கி வருகிறது. இவ்வேளையில் இந்த தொடரில் அதிக ரன்களை அடித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றப்போகும் வீரர் யார்? அதிக விக்கெட்டுகளை எடுத்து பர்பிள் தொப்பியை கைப்பற்றப்போகும் வீரர் யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அபிஷேக் சர்மாவை பின்னுக்கு தள்ளிய கே.எல் ராகுல் :
அதேபோன்று ஒவ்வொரு நாளும் இந்த பட்டியலில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில் நேற்று டெல்லி மைதானத்தில் நடைபெற்ற டெல்லி மற்றும் சி.எஸ்.கே அணிகளுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக சன் ரைசர்ஸ் அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா 440 ரன்களுடன் ஆரஞ்சு தோப்பியை கைப்பற்றி முதலிடத்தில் இருந்தார்.
இவ்வேளையில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரன கே.எல் ராகுல் 13 பந்துகளை சந்தித்து இரண்டு பவுண்டரியுடன் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இருந்தாலும் அவர் இந்த போட்டியில் எட்டு ரன்களை அடித்தபோது அபிஷேக் சர்மாவை கடந்து நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரராக ஆரஞு தொப்பியை கைப்பற்றியிருந்தார். மேலும் நேற்று அடித்த இந்த 12 ரன்கள் மூலம் நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரராக 445 ரன்களுடன் அவர் முதலிடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க : இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் பையா எனக்கு குடுத்த அட்வைஸ் இதுதான் – கார்த்திக் சர்மா பேட்டி
இருப்பினும் அடுத்த போட்டியில் அபிஷேக் சர்மா (440 ரன்கள்) உள்ளதால் அவர் அடுத்த ஆட்டத்தில் 6 ரன்கள் அடித்தால் கே.எல் ராகுலிடம் இருந்து மீண்டும் ஆரஞ்சு தொப்பி அபிஷேக் சர்மாவிடம் சொல்லும் என்பதால் இந்த ஆரஞ்சு தொப்பிக்கான போட்டியில் நிறைய சுவாரசியமான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



