இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் பையா எனக்கு குடுத்த அட்வைஸ் இதுதான் – கார்த்திக் சர்மா பேட்டி

Kartik Sharma and Sanju Samson
- Advertisement -

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 48-வது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்துடன் நேற்று களம் இறங்கிய சி.எஸ்.கே அணி முதலில் பந்துவீசி டெல்லி அணியை 155 ரன்களில் தடுத்து நிறுத்தியது. பின்னர் 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சி.எஸ்.கே அணியானது :

சஞ்சு சாம்சனுடன் இணைந்து விளையாடியது குறித்து : கார்த்திக் சர்மா பேச்சு

முதல் விக்கெட்டாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த உர்வில் பட்டேலும் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க சென்னை அணி 6.3 ஓவர்களிலேயே 45 ரன்களில் 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது. பின்னர் சஞ்சு சாம்சன் மற்றும் கார்த்திக் சர்மா ஆகியோரது ஜோடி இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 114 ரன்கள் பார்ட்னர் அமைத்து சென்னை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இறுதியில் சென்னை அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 159 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியின் போது சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 52 பந்துகளில் 87 ரன்களையும், கார்த்திக் சர்மா 31 பந்துகளில் 41 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் சஞ்சு சாம்சனுடன் இணைந்து விளையாடி குறித்து பேசிய இளம் கார்த்திக் சர்மா கூறியதாவது : சஞ்சு சாம்சனுடன் இணைந்து விளையாடியது உண்மையிலேயே அற்புதமான ஒரு விடயமாக இருந்தது.

நாங்கள் இருவரும் மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை இந்த போட்டியில் அமைத்திருந்தோம். ஸ்பின்னர்களுக்கு எதிராக பேட்டிங் செய்வது சற்று கடினமாக இருந்தது. ஏனெனில் பந்து நின்று நன்றாக திரும்பியதால் ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் சற்று சிரமம் இருந்தது. ஆனாலும் இலக்கு பெரியதாக இல்லை என்பதனால் தேவையான நேரத்தினை எடுத்துக் கொள்ளலாம் என்றும் நினைத்தோம். அதேபோன்று நான் பேட்டிங் செய்ய வரும்போது சஞ்சு பையா என்னிடம் வந்து :

- Advertisement -

இதையும் படிங்க : ரசிகர்கள் என்னை சேட்டானு கூப்புடறதை விட இப்படி கூப்பிட்டா தான் பிடிக்கும் – ஆட்டநாயகன் சஞ்சு சாம்சன் ஓபன்டாக்

ஆடுகளம் மெதுவாக உள்ளது எனவே உனக்கு என்ன வருகிறதோ அந்த முறையில் மட்டும் பேட்டிங் செய் ரிஸ்க் எடுத்து விளையாட வேண்டாம் என்று கூறினார். அந்த வகையில் நானும் பொறுமை காத்து விளையாடினேன். அதேபோன்று எந்த ஒரு பவுலரையும் டார்கெட் செய்து விளையாடவில்லை. என்னுடைய ரேஞ்சில் பந்து வந்தால் அடிக்க வேண்டும் என்பதை மட்டுமே கணக்கில் கொண்டு விளையாடினேன் என கார்த்திக் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement