குஜராத் அணியை தடுத்து நிறுத்தி நாங்கள் பெற்ற இந்த வெற்றிக்கு காரணம் இதுதான் – ரஜத் பட்டிதார் பேச்சு

Rajat Patidar
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 34 ஆவது லீக் போட்டியானது நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. அந்தவகையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

குஜராத் அணிக்கு எதிரான வெற்றிக்கு பின்னர் : ரஜத் பட்டிதார் பேட்டி

அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை குவித்தது. குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக சாய் சுதர்சன் 100 ரன்களையும், சுப்மன் கில் 32 ரன்களையும் குவித்தனர். பெங்களூரு அணி சார்பாக புவனேஷ்வர் குமார், ஹேசல்வுட் மற்றும் சுயாஷ் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

- Advertisement -

பின்னர் 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆர்.சி.பி அணியானது குஜராத் அணியின் பந்துவீச்சை மிகச்சிறப்பாக எதிர்கொண்டு 18.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 81 ரன்களையும், தேவ்தத் படிக்கல் 55 ரன்களையும் குவித்தனர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய ஆர்.சி.பி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறியதாவது : உண்மையிலேயே இந்த போட்டி மிகவும் கடினமான போட்டியாக இருந்தது. இந்த போட்டியில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்களும் இருந்தது. எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாக பந்துவீசி குஜராத் அணியை தடுத்து நிறுத்தினர். தேவையான நேரத்தில் சரியான இடத்தில் எங்களது பவுலர்கள் பந்துவீசியதால் அவர்களை கட்டுக்குள் வைக்க முடிந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : ஐ.பி.எல் போட்டிகளில் கிரிஸ் கெயிலின் மாபெரும் சாதனையை முறியடித்த சாய் சுதர்சன் – விவரம் இதோ

இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 200 ரன்களுக்குள் அல்லது 200 ரன்களை சுற்றி நிறுத்த வேண்டும் என்று நினைத்தோம். அந்தவகையில் பந்துவீச்சாளர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்தனர். பின்னர் விராட் கோலி மற்றும் பெத்தல் ஆகியோர் சேஸிங்கை அருமையாக துவங்கினர். தேவ்தத் படிக்கல் ஒரு அற்புதமான இன்னிங்க்ஸை விளையாடியிருந்தார். ஆனாலும் மிடில் ஓவர்களில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தோம். அதில் சில விடயங்களை சரி செய்ய வேண்டும். அடுத்த போட்டியில் அந்த தவறுகளை திருத்திக்கொண்டு இன்னும் பலமாக வருவோம் என ரஜத் பட்டிதார் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement