குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த இளம் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான சாய் சுதர்சன் நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 34 ஆவது லீக் போட்டியில் சதமடித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் 58 பந்துகளை சந்தித்த அவர் 11 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 100 ரன்கள் அடித்து ஜோஷ் ஹேசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
கிரிஸ் கெயிலின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சன் :
அவரது இந்த சதம் மூலம் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான கிரிஸ் கெயிலின் மாபெரும் சாதனை ஒன்றினையும் ஐ.பி.எல் போட்டிகளில் முறியடித்து சாய் சுதர்சன் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதுகுறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்தவகையில் சாய் சுதர்சன் நிகழ்த்திய சாதனை யாதெனில் :
கடந்த 2022 ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகமான சாய் சுதர்சன் இதுவரை 47 போட்டிகளில் விளையாடி 3 சதம் மற்றும் 13 அரைசதம் என 47 ரன்கள் சராசரியுடன் 2028 ரன்களை குவித்துள்ளார். நேற்று அவர் அடித்த இந்த சதம் ஐ.பி.எல் போட்டிகளில் அவரது மூன்றாவது சதமாக பதிவாகியுள்ளது. நேற்றைய போட்டியில் அவர் 72 ரன்களை அடித்தபோது ஐ.பி.எல் போட்டிகளில் 2000 ரன்களை பூர்த்தி செய்தார்.
இதன்மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்களை பூர்த்தி செய்த வீரராக மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். நேற்று அவர் விளையாடிய 47 ஆவது போட்டியில் 2000 ரன்களை பூர்த்தி செய்துள்ளார். இவருக்கு முன்னதாக இந்த சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த முன்னாள் வீரரான கிரிஸ் கெயில் தன்வசம் வைத்திருந்தார்.
இதையும் படிங்க : கிரிஸ் கெயில், ரோஹித் சர்மாவுக்கு அடுத்து இன்று மாபெரும் சாதனை நிகழ்த்த காத்திருக்கு – விராட் கோலி
கிரிஸ் கெயில் தனது 48 ஆவது போட்டியில் 2000 ரன்களை பூர்த்தி செய்திருந்த வேளையில் அவரது சாதனையை ஒரு போட்டிக்கு முன்னதாக முறியடித்து தனது 47 ஆவது போட்டியில் 2000 ரன்களை பூர்த்தி செய்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



