கிரிஸ் கெயில், ரோஹித் சர்மாவுக்கு அடுத்து இன்று மாபெரும் சாதனை நிகழ்த்த காத்திருக்கு – விராட் கோலி

Virat Kohli
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 34-வது லீக் போட்டியானது இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதி வருகின்றன.

விராட் கோலி நிகழ்த்த காத்திருக்கும் மாபெரும் சாதனை :

அதன்படி நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது குஜராத் அணியானது பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது பெங்களூரு அணி சார்பாக விளையாடி வரும் விராட் கோலி ஒரு மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக கிரிஸ் கெயில் மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது வீரராக இந்த மாபெரும் வரலாற்று சாதனை நிகழ்த்த விராட் கோலி காத்திருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் விராட் கோலி இதுவரை 274 போட்டிகளில் விளையாடி 8 சதம் மற்றும் 65 அரைசதம் என 8198 ரன்களை குவித்துள்ளார். இதில் 799 பவுண்டரிகளும், 299 சிக்ஸர்களையும் அடித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : தடுமாறி வரும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு மிட்சல் ஸ்டார்க் மூலம் வந்த நற்செய்தி – விவரம் இதோ

இவ்வேளையில் இன்றைய போட்டியில் அவர் மேலும் ஒரு சிக்ஸர் அடிக்கும் பட்சத்தில் ஐ.பி.எல் போட்டிகளில் 300 சிக்சர்களை பூர்த்தி செய்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார். இந்த பட்டியலில் கிரிஸ் கெயில் 357 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், ரோகித் சர்மா 310 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் வேளையில் விராட் கோலி 299 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement