இந்த ஐ.பி.எல் தொடரில் தனது மோசமான பவுலிங் பார்ம் குறித்த கேள்விக்கு பதிலடி கொடுத்த – வருண் சக்கரவர்த்தி

Varun Chakaravarthy
- Advertisement -

கொல்கத்தா அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் தடுமாறி வந்தார். அதோடு ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய அவரது பௌலிங் ஃபார்ம் பெரிய விமர்சனத்தையும் சந்தித்திருந்தது. ஏனெனில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் அவரது பவுலிங் சுமாராக இருந்தாலும் அதிகளவு ரன்களை கசிய விட்டார்.

தனது பார்ம் குறித்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த : வருண் சக்கரவர்த்தி

அதன்பின்னர் தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரிலும் அவரது பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடும் வேளையில் வருண் சக்கரவர்த்தியிடம் இருக்கும் தந்திரத்தை பேட்ஸ்மேன்கள் புரிந்து கொண்டார்கள் என்றும் இனி அவரது சிறப்பான செயல்பாடு தொடராது என்றும் பல்வேறு விமர்சனங்கள் அவர் மீது இருந்தன. ஆனால் இந்த தொடரின் முதல் மூன்று போட்டியில் சரியாக பந்துவீசாத அவர் நான்காவது போட்டியின் போது 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் அவரது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் 4 ஓவர்களை வீசிய அவர் வெறும் 14 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தன் மீதுள்ள விமர்சனங்களுக்கு அவர் தனது பந்துவீச்சின் மூலம் பதிலடி கொடுத்திருந்தார்.

அதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து தனது சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய அவர் கூறியதாவது : நான் இந்த தொடரில் நான் சிறப்பாகவே பந்துவீசியிருந்தேன். ஆனாலும் துவக்க போட்டிகளில் ஆடுகளம் பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கவில்லை. இப்படி பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களில் எந்த சுழற்பந்து வீச்சாளர்களாக இருந்தாலும் ரன்களை வாரி கொடுப்பார்கள். அதில் என்னுடைய தவறு ஏதுமில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : 254 ரன்கள் அடிக்கப்பட்ட போட்டியிலும் அசத்திய பிரின்ஸ் யாதவ்.. உண்மையிலேயே சூப்பர் பவுலர் – என்ன நடந்தது?

கடைசியாக விளையாடிய 2 போட்டிகளில் ஆடுகளத்தில் பந்துவீச்சுக்கு சற்று சாதகம் இருந்ததால் என்னுடைய பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. ஆடுகளத்தில் பந்து திரும்பாத போது நிறைய ரன்கள் கசிய தான் செய்யும். அதேவேளையில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் இருக்கும் பட்சத்தில் என்னுடைய சிறப்பான பந்துவீச்சு வெளிப்படும் என வருண் சக்கரவர்த்தி பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement