254 ரன்கள் அடிக்கப்பட்ட போட்டியிலும் அசத்திய பிரின்ஸ் யாதவ்.. உண்மையிலேயே சூப்பர் பவுலர் – என்ன நடந்தது?

Prince Yadav
- Advertisement -

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான நடப்பு 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 29-வது லீக் போட்டியானது நேற்று சண்டிகர் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததும் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி போட்டியின் ஆரம்பத்திலேயே பிரப்சிம்ரன் சிங்கின் விக்கெட்டை இழந்தது. ஆனால் அதன் பின்னர் இரண்டாவது விக்கெட்ட்டிற்கு ஜோடி சேர்ந்த பிரியான்ஷ் ஆர்யா மற்றும் கூப்பர் கானோலி ஆகியோர் 182 ரன்கள் சேர்த்து அசத்தினர்.

பஞ்சாப் அணிக்கெதிராக அசத்திய பிரின்ஸ் யாதவ் :

அதிலும் குறிப்பாக கிட்டத்தட்ட ஓவருக்கு 12.7 ரன்கள் வீதம் அடித்து அசத்திய அவர்கள் ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்க விட்டனர். இதன் காரணமாக போட்டியின் ரன் விகிதம் அதிகரிக்க இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக பிரியான்ஷ் ஆர்யா 93 ரன்களையும், கூப்பர் கானோலி 87 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

இந்த போட்டியில் பஞ்சாப் அணி 254 ரன்கள் அடித்ததன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் இரண்டாவது முறையாக 250 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தியது. இந்த போட்டியின் போது பந்துவீச்சை பொறுத்தவரை லக்னோ அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் இப்படி மோசமாக ரன்களை வாரி வழங்கியிருந்தாலும் அந்த அணி சார்பாக விளையாடியிருந்த 24 வயதான இளம்வீரர் பிரின்ஸ் யாதவ் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார்.

இந்த போட்டியை பொறுத்தவரை 4 ஓவர்களை முழுமையாக வீசிய அவர் வெறும் 25 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். மற்ற பந்துவீச்சாளர்கள் எல்லாம் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் வாரி வழங்கியிருந்த வேளையில் இந்த போட்டியில் இறுதி கட்டத்தில் சிக்கனமாக பந்துவீசிய அவர் பஞ்சாப் அணியின் வீரர்கள் பவுண்டரி அடிக்க விடமால் தடுத்து நிறுத்தினார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஆயுஷ் பதோனியை துவக்க வீரராக களமிறக்கியது ஏன்? போட்டிக்கு பின்னர் ரிஷப் பண்ட் – அளித்த பதில்

அவரது இந்த சிறப்பான பந்துவீச்சு பலரது பார்வையையும் அவர்மீது திரும்ப வைத்துள்ளது. கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக அறிமுகமான பிரின்ஸ் யாதவ் இந்த ஆண்டு அந்த அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement