இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் நான் சில தவறுகளை செய்து விட்டேன் – ரியான் பராக் பேட்டி

Riyan Parag
- Advertisement -

கௌஹாத்தி நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 16-வது லீக் போட்டியில் விளையாடியிருந்த ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பெற்றிருந்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

ஆர்.சி.பி அணிக்கெதிரான வெற்றி குறித்து : ரியான் பராக் பேச்சு

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது. பின்னர் 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி 18 ஓவர்களின் முடிவில் 4 விக்கெடுகளை இழந்து 202 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் கூறுகையில் : கடந்த சில ஆண்டுகளாக பெங்களூரு அணி எதிர்த்து விளையாடியது குறித்து எதையும் நினைக்காமல் இம்முறை சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைத்தோம். அந்த வகையில் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றியும் பெற்றுள்ளோம்.

இந்த போட்டியில் எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி இருந்தனர். அதேபோன்று 200 ரன்களில் பெங்களூரு அணியை தடுத்து நிறுத்தியது சிறப்பான ஒரு செயல்பாடுதான். இருந்தாலும் ஒரு 20 ரன்களை நாங்கள் குறைவாக கொடுத்திருக்கலாம். பந்துவீச்சின் போது சில தவறான முடிவுகளை நான் எடுத்துவிட்டேன்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்த போட்டியில் நாங்க தோல்வியை சந்திக்க அந்த பையனோட ஆட்டம் தான் காரணம் – ரஜத் பட்டிதார் பேட்டி

இல்லையென்றால் 170 ரன்களுக்கு கூட அவரை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். இருப்பினும் இந்த போட்டியில் எங்களது அணியின் வீரர்கள் அனைவரும் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கி அணிக்கு வெற்றியை தேடித் தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement