இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 52 டெஸ்ட் போட்டிகள், 89 ஒருநாள் போட்டிகள் மற்றும் 95 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதுமட்டுமின்றி கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் அவர் இதுவரை 148 போட்டிகளில் விளையாடி உள்ளார். சர்வதேச அளவில் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக பார்க்கப்படும் அவர் இன்றளவும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.
ஜஸ்ப்ரீத் பும்ரா குறித்து யுவ்ராஜ் சிங் பகிர்ந்துகொண்ட நினைவு :
இந்தியா கண்டெடுத்த மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் முக்கியமான வீரராக பார்க்கப்படும் பும்ரா இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக அவர் விளையாடி வரும் வேளையில் ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்சி அவரது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை அடித்தது பேசு பொருளாக மாறியுள்ளது.
இவ்வேளையில் ஜஸ்ப்ரீத் பும்ராவின் இளம் வயதில் தான் அவரிடம் எவ்வாறு தடுமாறினேன் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவ்ராஜ் சிங் பிரத்தேக பேட்டி ஒன்றில் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்து இந்திய அணிக்காக திரும்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது வலைப்பயிற்சியில் 16 வயதான பும்ரா எனக்கு எதிராக பந்து வீசினார். அந்த நேரத்தில் அவர் அதிவேகமாக பந்து வீசியதால் அவரை வலைப்பயிற்சியில் சந்திக்க வேண்டாம் என்று நான் தான் வெளியேற்றினேன்.
மேலும் அவர் எனக்கு எதிராக பந்து வீசுவதை நிறுத்த வேண்டும் என்று நினைத்தேன். ஏனெனில் புற்று நோய்க்குப் பிறகு மீண்டு வந்த நான் இயல்பான ஆட்டத்தை விளையாட முயற்சி செய்த வேளையில் அப்போதே பும்ரா மிக அதிகமான வேகத்தில் பந்து வீசிக் கொண்டிருந்தார். அதனால்தான் அவரை பந்து வீச வேண்டாம் என்று வெளியேற்றினேன்.
பிறகு சில ஆண்டுகள் கழித்து பும்ரா என்னிடம் வந்து நான் அவரை பந்து வீசக்கூடாது என்ற தடுத்த அந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அப்போது நான் அவரிடம் : ஆமாம் நீங்கள் அப்போது மிக அதிவேகமாக பந்து வீசிக்கொண்டிருந்தீர்கள். கொஞ்ச தூரம் ஓடிவந்து பந்து வீசினாலும் உங்களது பந்து மிகவும் வேகமாக வந்தது. அதனால் தான் உங்களை பந்துவீச வேண்டாம் என்று நிறுத்தினேன் என்று கூறினேன்.
இதையும் படிங்க : தோனி தான் இந்த விடயத்தில் என்னோட முன்னோடி.. அவருக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன் – முகுல் சவுத்ரி உருக்கம்
அப்போது அவரிடம் இவ்வளவு திறமை இருக்கும் நான் என்று நான் நினைக்கவில்லை. 16 வயதிலேயே அவரிடம் பேட்ஸ்மேனை ஏமாற்றும் ஒரு வித்தை இருந்ததை நான் பார்த்தேன். அதுமட்டும் இன்றி தொடர்ந்து விலா எலும்பு பகுதிகளில் பந்தை வைத்து தாக்குகிறார். இப்படி ஒரு பவுலரை எந்த ஒரு பேட்ஸ்மேனுக்கும் பிடிக்காது என யுவராஜ் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.



