தோனி தான் இந்த விடயத்தில் என்னோட முன்னோடி.. அவருக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன் – முகுல் சவுத்ரி உருக்கம்

Mukul and Dhoni
- Advertisement -

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 15-ஆவது லீக் போட்டியில் விளையாடிய ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது கடைசி பந்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி 3 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் லக்னோ அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இளம்வீரர் முகுல் சவுத்ரி திகழ்ந்தார்.

எம்.எஸ் தோனி குறித்து பேசிய முகுல் சவுத்ரி :

அந்த வகையில் இந்த போட்டியில் லக்னோ அணி 182 ரன்கள் என்கிற இலக்கினை எதிர்த்து விளையாடிய வேளையில் ஒரு கட்டத்தில் 128 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் கடைசி நான்கு ஓவர்களில் 54 ரன்கள் தேவை என்கிற வேளையில் தனி ஆளாக நின்று போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார்.

- Advertisement -

இந்த போட்டியில் 27 பந்துகளை சந்தித்த அவர் 2 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் என 54 ரன்கள் குவித்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். நேற்றைய போட்டியில் கிட்டத்தட்ட லக்னோ அணி தோல்வியை சந்திக்கும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் தனி ஒரு ஆளாக அவர் போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றிருந்தது.

இந்நிலையில் நேற்றைய இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய முகுல் சவுத்ரி முன்னாள் சி.எஸ்.கே அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது : தோனி எப்படி ஆட்டத்தை முடித்து வைக்கிறார் என்பதை நான் மிகவும் ஆர்வமாக பார்ப்பேன். அதேபோன்று நானும் அதை பின்பற்றி பேட்டிங் செய்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : ஒரே இரவில் ஹீரோவான 21 வயது லக்னோ வீரர்.. யார் இந்த முகுல் சவுத்ரி? – சுவாரஸ்ய தகவல் இதோ

என்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் அவர்தான் எனக்கு உத்வேகம் அளித்தார். கொல்கத்தா அணிக்கு எதிராக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பினிஷிங் செய்து லக்னோ அணிக்கு நான் பெற்றுத்தந்த வெற்றியை நான் அவருக்கு சமர்ப்பிக்கிறேன் என முகுள் சவுத்ரி தோனி குறித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement