இந்தமாதிரி ஆட்டத்தை தான் நாங்க விளையாடுவோம்.. நியூசிலாந்தை நொறுக்கிய பிறகு – சூரியகுமார் யாதவ் பேட்டி

SKY
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரினை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்கிற கணக்கில் இந்த தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் குவித்தது.

நியூசிலாந்து அணியை வீழ்த்தியது குறித்து : சூரியகுமார் யாதவ் பேச்சு

பின்னர் 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 155 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அபிஷேக் சர்மா 68 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 57 ரன்களையும் குவித்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில் :

உண்மையிலேயே இந்த விடயத்தை பற்றி நாங்கள் பேச வேண்டும். இதுபோன்ற ஒரு அதிரடியான ஆட்டத்தை தான் நாங்கள் விளையாட விரும்புகிறோம். அதுமுதலில் பேட்டிங் செய்தாலும் சரி, இரண்டாவதாக சேசிங் செய்தாலும் சரி அதிரடியாகவே ஆட விரும்புகிறோம். 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையோ அல்லது 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையோ அடுத்த போட்டியில் நாங்கள் இழந்தாலும் இதேபோன்ற அதிரடியான ஆட்டத்தை தான் வெளிப்படுத்துவோம்.

- Advertisement -

இதையும் படிங்க : 4 ஆவது இந்திய வீரராக சர்வதேச டி20 போட்டிகளில் மோசமான சாதனையை நிகழ்த்திய – சஞ்சு சாம்சன்

டி20 கிரிக்கெட் போட்டிகளில் இப்படி விளையாடவே நாங்கள் விரும்புகிறோம். அதுவே எங்கள் திட்டமாகவும் இருந்து வருகிறது. இந்த அதிரடியான செயல்பாட்டை நாங்கள் அப்படியே இந்த தொடர் முழுவதுமே கொண்டு செல்வோம் என இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement