நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று கௌகாத்தி நகரில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் விளையாடிய இந்திய அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரினை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் தற்போதே இந்த தொடரை கைப்பற்றி விட்டது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
சஞ்சு சாம்சன் நிகழ்த்திய மோசமான சாதனை :
அதனை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கினை துரத்தி விளையாடிய இந்திய அணியானது துவக்கம் முதலே அதிரடியாக விளையாடி வெறும் 10 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 155 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 68 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 57 ரன்களையும் குவித்திருந்தனர். அதேவேளையில் இந்த போட்டியின் போது துவக்க வீரராக விளையாடிய சஞ்சு சாம்சன் தான் சந்தித்த முதல் பந்திலேயே மேட் ஹென்றி பந்துவீச்சில் போல்ட்டாகி வெளியேறினார்.
இந்த நியூசிலாந்து தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் மூன்றாவது போட்டியிலாவது பார்மிற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த போட்டியிலும் அவர் டக் அவுட்டாகி வெளியேறியது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் ஆட்டமிழந்ததன் மூலம் நான்காவது இந்திய வீரராக சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு மோசமான சாதனையை சந்தித்திருக்கிறார்.
இதையும் படிங்க : யுவ்ராஜ் சிங்கிற்கு அடுத்து 2 ஆவது இந்திய வீரராக அபிஷேக் சர்மா நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ
அந்த வகையில் அவர் நிகழ்த்திய மோசமான சாதனை யாதெனில் : ஏற்கனவே சர்வதேச டி20 போட்டிகளில் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்த இந்திய வீரர்களாக கே.எல் ராகுல், பிரித்வி ஷா மற்றும் ரோகித் சர்மா ஆகியோ இருக்கும் வேளையில் நான்காவது இந்திய வீரராக தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்த வீரர் என்ற மோசமான சாதனையை சஞ்சு சாம்சன் நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.



