யுவ்ராஜ் சிங்கிற்கு அடுத்து 2 ஆவது இந்திய வீரராக அபிஷேக் சர்மா நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ

Abhishek Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது நேற்று கௌஹாத்தி நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி எந்த தொடரில் மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

2 ஆவது இந்திய வீரராக அபிஷேக் சர்மா நிகழ்த்திய சாதனை :

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை குவித்தது. நியூசிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 48 ரன்களையும், மார்க் சாப்மன் 32 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 10 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 155 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 68 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 57 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் துவக்க வீரராக விளையாடிய அபிஷேக் சர்மா யுவராஜ் சிங்கிற்கு அடுத்து சர்வதேச டி20 போட்டிகளில் இரண்டாவது இந்திய வீரராக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :

- Advertisement -

இதையும் படிங்க : வைபவ் சூர்யவன்ஷி கிட்ட இருக்குற ஒரு பெரிய பிளஸ் இதுதான்.. அந்த பையனுக்கு பயமில்ல – யுவராஜ் சிங் பாராட்டு

இந்த போட்டியில் அவர் 20 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் என 68 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேவேளையில் 14 பந்துகளிலேயே 5 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என அரைசதம் அடித்து சர்வதேச டி20 போட்டிகளில் யுவராஜ் சிங்கிற்கு அடுத்து அதிவேக அரைசதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement