இதுக்காக தற்காலிகமா கழற்றி விட்ருக்காங்க.. சுப்மன் கில் மீண்டும் இந்திய டி20 கேப்டனாவாரு.. மைக்கேல் கிளார்க்

Micheal Clarke
- Advertisement -

ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை தொடர் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி துவங்குகிறது. அத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து கடைசி நேரத்தில் சுப்மன் கில் கழற்றி விடப்பட்டது அனைவரையும் ஆச்சரியமடைய வைத்தது. ஏற்கனவே 2023ஆம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடத் தவறியதால் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார்.

அந்த நிலையில் கடந்த வருடம் திடீரென அவரை ஆல் ஃபார்மட் கேப்டனாக வளர்க்க நினைத்த தேர்வுக்குழு துணை தலைவராக தேர்ந்தெடுத்து ஓப்பனிங்கில் விளையாடும் வாய்ப்பு கொடுத்தது. அந்த வாய்ப்பில் சுமாராக விளையாடிய கில் கடைசியாக களமிறங்கிய 18 சர்வதேச போட்டிகளில் அரை சதம் கூட அடிக்கவில்லை. இருப்பினும் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவருக்கு டி20 உலகக்கோப்பையில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

கில் மறுபடியும் வருவாரு:

ஆனால் அணியை விட யாரும் முக்கியமில்லை என்று கருதிய தேர்வுக்குழு அவரை கடைசி நேரத்தில் கழற்றி விட்டது அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்தது. அதன் காரணமாக இந்திய டி20 அணியில் சுப்மன் கில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது கடினமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவருக்கு போட்டியாக சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், இஷான் கிசான் என ஓப்பனிங்கில் பல அதிரடி வீரர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் 2026 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே ஃபார்மில் இல்லாத கில்லை தற்காலிகமாக தேர்வுக்குழு கழற்றி விட்டுள்ளதாக முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். எனவே உலகக் கோப்பை முடிந்ததும் மீண்டும் அவர் இந்திய அணியின் டி20 கேப்டனாக வாய்ப்புள்ளதாக கிளார்க் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

கிளார்க் கணிப்பு:

“இப்போதும் கில் போட்டியில் இருக்கலாம். அது அதிகம் மாறவில்லை. அணி அறிவிக்கப்பட்ட போது அவர் நல்ல ஃபார்மில் இல்லை. மறுபுறம் இந்தியாவுக்கு ஓப்பனிங்கில் விளையாட நிறைய வீரர்கள் உள்ளார்கள். எனவே கேப்டனாக இல்லாத அவரை கழற்றி விட முடிவெடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவருடைய ஃபார்ம் பற்றி கேள்வி இருக்கிறது”

இதையும் படிங்க: இந்தியாவில் விளையாடுவது பற்றி.. இதை சொல்றது எங்க கேரியருக்கு ஆபத்தாகிடும்.. லிட்டன், சாண்டோ பேட்டி

“அதுவே உலகக்கோப்பைக்கு செல்லும் போது அவரை கழற்றி விடுவதற்கான காரணமாக அமைந்தது. இருப்பினும் உலகக் கோப்பை முடிந்த பின் அவர் அணிக்குள் வருவது மட்டுமின்றி கேப்டன்ஷிப் பொறுப்பையும் பெற்றால் ஆச்சரியப்படாதீர்கள். நம்ப முடியாத வீரரான அவர் தற்சமயத்தில் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை. எனவே முன்னோக்கி செல்கையில் கில் தேர்வில் அதிக மாற்றங்கள் இருக்கும் என்று நான் கருதவில்லை. தற்சமயத்தில் 100% டி20 உலகக் கோப்பையை வெல்வதில் மட்டும் கவனம் செலுத்துகிறோம் என்பதை இந்தியா தெளிவாகக் காண்பித்துள்ளது” என்று கூறினார்.

Advertisement