இந்தியாவில் விளையாடுவது பற்றி.. இதை சொல்றது எங்க கேரியருக்கு ஆபத்தாகிடும்.. லிட்டன், சாண்டோ பேட்டி

Liton Das
- Advertisement -

ஐசிசி 2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு சென்று விளையாட மாட்டோம் என்று வங்கதேசம் அடம் பிடித்து வருகிறது. சமீபத்தில் வங்கதேசத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் சில இந்து மக்கள் இயற்கை எய்தினார்கள். அதற்கு பதிலடியாக இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் விளையாடக்கூடாது என்று இங்குள்ள அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனால் பிசிசிஐ அறிவுறுத்தலின் பேரில் 9.20 கோடிக்கு வாங்கப்பட்ட ரஹ்மானை கொல்கத்தா தங்களது அணியிலிருந்து விடுவித்தது. அதற்கு பதிலடியாக இந்தியாவுக்கு வந்து விளையாட மாட்டோம் என்று அறிவித்துள்ள வங்கதேசம் ஐபிஎல் தொடரை தங்கள் நாட்டில் ஒளிபரப்பவும் தடை விதித்துள்ளது. அத்துடன் தங்களது போட்டிகளை இலங்கையில் நடக்குமாறு ஐசிசிக்கு வங்கதேச வாரியம் கோரிக்கை வைத்து வருகிறது.

- Advertisement -

விரும்பத்தை சொன்னால்:

அந்த நிலையில் ஒருவேளை டி20 உலகக் கோப்பையிலிருந்து வெளியேறினால் வங்கதேசத்திற்கு பாதிப்பில்லை என்று அந்நாட்டு வாரியத்தின் இயக்குனர் நஜ்முல் இஸ்லாம் தெரிவித்தார். அதே சமயம் பல வருடங்களாகியும் வங்கதேசத்திற்கு தங்கள் நாட்டு வீரர்கள் உலகக் கோப்பையை கொடுக்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார். எனவே உலகக் கோப்பையில் விளையாடாமல் வெளியேறினால் அதற்கான சம்பளம் அல்லது இழப்பீடு வங்கதேசம் வீரர்களுக்கு வழங்கப்படாது என்றும் அவர் கூறியது சர்ச்சையானது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீரர்கள் போராட்டம் நடத்தியதால் நஜ்முலை இயக்குனர் பதவியிலிருந்து வங்கதேச வாரியம் நீக்கியது. இந்நிலையில் இந்தியா உட்பட உலகக்கோப்பை எங்கே நடைபெற்றாலும் அங்கே சென்று விளையாடுவதற்கு வங்கதேச வீரர்கள் தயாராக இருப்பதாக அந்நாட்டின் கேப்டன் லிட்டன் தாஸ் மறைமுகமாக தெரிவித்துள்ளார். ஆனால் அதை வெளிப்படையாக சொன்னால் தம்முடைய கேரியருக்கு ஆபத்து ஏற்படும் என்று அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கேரியருக்கு ஆபத்து:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இதுவரை எந்த சம்மதமும் தெரிவிக்கப்படவில்லை. அது பற்றி எனக்கும் எங்கள் அணிக்கும் மொத்த வங்கதேசத்திற்கும் உறுதியாக எதுவும் தெரியாது. நீங்கள் கேட்கும் கேள்வியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அதற்கான பதிலை சொல்வது எனக்கு பாதுகாப்பானதல்ல” என்று கூறினார்.

இதையும் படிங்க: கேப்டனை டார்ச்சர் பண்ணாம.. வாயை மூடிக்கிட்டு குல்தீப் அதை செஞ்சா போதும்.. ரோஹித் கிண்டல் அட்வைஸ்

அது பற்றி வங்கதேச வீரர் நஜ்முல் சாண்டோ பேசியது பின்வருமாறு. “வீரர்களாக நாங்கள் எப்போதும் விளையாட விரும்புகிறோம். குறிப்பாக உலகக் கோப்பை போன்ற தொடர்கள் 4 வருடத்திற்கு ஒருமுறை அரிதாக நடக்கக் கூடியதாகும். அது எங்கள் கிரிக்கெட்டை விளையாட நல்வாய்ப்பாக பார்க்கிறேன். ஆனால் வாரியத்திற்குள் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியாது. இருப்பினும் வீரர்களாக நாங்கள் விளையாடவே விரும்புகிறோம். உலகக் கோப்பையில் அங்கமாக இருப்பது எங்கள் வீரர்களுக்கு நல்லது” என்று கூறினார்.

Advertisement