இந்தியா விரும்பியது தானா கிடைச்சுருச்சு.. 2வது ஒன்டேவில் சுந்தருக்கு பதில்.. மாற்று வீரரை சேர்த்த கில் பேட்டி

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி 2026 புத்தாண்டில் நியூசிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா புத்தாண்டை வெற்றிகரமாக துவங்கியது. அதைத் தொடர்ந்து 2வது போட்டி சவுராஷ்டிராவில் உள்ள ராஜ்கோட் மைதானத்தில் ஜனவரி 14ஆம் தேதி நடைபெறுகிறது.

மதியம் 1.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய நியூஸிலாந்து டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இந்திய அணியில் கடந்த போட்டியில் காயமடைந்த வாஷிங்டன் சுந்தர் இப்போட்டியில் களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக நித்திஷ் ரெட்டி சேர்க்கப்படுவதாக இந்திய கேப்டன் சுப்மன் கில் அறிவித்தார்.

- Advertisement -

இந்தியா முதலில் பேட்டிங்:

அத்துடன் ராஜ்கோட் மைதானத்தின் பிட்ச் நேரம் செல்ல செல்ல ஸ்லோவாகும் என்று அவர் தெரிவித்தார். அங்கே நேற்று விளையாடிய பயிற்சி போட்டியில் இரவு நேரத்தில் பனியின் தாக்கம் அதிகமாக இல்லை என்றும் அவர் கூறினார். எனவே இப்போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பதே வெற்றிக்கான சிறந்த வழி என்றும் கில் தெரிவித்தார்.

அந்த வாய்ப்பை டாஸ் வெல்லாமலேயே தங்களுக்கு நியூசிலாந்து கொடுத்ததில் மகிழ்ச்சி என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “உண்மையில் இங்கு நடைபெற்ற கடந்த சில போட்டிகளைக் கருத்தில் கொண்டு நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்பினோம். நேற்று இங்கு நாங்கள் பயிற்சி எடுத்த போது நிறைய பனி இல்லை”

- Advertisement -

சுந்தருக்கு பதில் நிதிஷ்:

“பிட்ச் நேரம் செல்ல செல்ல ஸ்லோவாக மாறுவதாக எங்களுடைய வீரர்கள் உணர்ந்தனர். எனவே இங்கு முதலில் பேட்டிங் செய்வதே சிறந்த தேர்வாகும். தனிப்பட்ட முறையில் கடந்த போட்டியில் எனக்கு நல்ல ரிதம், போக்கு இருந்ததாக கருதினேன். எப்போதுமே வெற்றியில் பங்காற்றுவது நல்ல உணர்வாகும். அதே போல இன்றும் நான் பெரிய ஸ்கோர் அடிப்பேன் என்று நம்புகிறேன்”

இதையும் படிங்க: கிரிக்கெட்டும் சாப்பாடு மாதிரி தான்.. என்னை மாதிரி இனிப்பை அதிகம் சாப்பிட்டா நல்லதல்ல.. தோனி பேட்டி

“மிடில் ஓவர்கள் முக்கியமானதாக இருந்தது. கடந்த போட்டியில் நியூசிலாந்து நன்றாக துவங்கியும் நாங்கள் கம்பேக் கொடுத்தோம். குறிப்பாக மிடில் ஓவர்களில் எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகள் எடுத்தது வித்தியாசத்தை ஏற்படுத்தியது. அது போன்ற சூழ்நிலைகளில் எதுவும் எளிதல்ல. ஆனால் அவர்கள் தங்களது வேகத்தையும் வேரியேசனையும் கலந்து சிறப்பாக பந்து வீசினர். சுந்தர் தொடரிலிருந்து வெளியேறியுள்ளதால் நித்திஷ் வந்துள்ளார்” என்று கூறினார்.

Advertisement