கிரிக்கெட்டும் சாப்பாடு மாதிரி தான்.. என்னை மாதிரி இனிப்பை அதிகம் சாப்பிட்டா நல்லதல்ல.. தோனி பேட்டி

MS Dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ். தோனி வரலாற்றின் மகத்தான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். உலகிலேயே 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் அறியப்படுகிறார். குறிப்பாக லோயர் ஆர்டரில் களமிறங்கி போட்டிகளை அதிரடியாக ஃபினிஷிங் செய்வதிலும் தோனி சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படுகிறார்.

2019 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற தோனி ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார். சில வருடங்களுக்கு முன் முழங்காலில் சந்தித்த காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டு அவரால் சமீப காலங்களில் வேகமாக ஓட முடிவதில்லை. அதனால் கடைசிக்கட்ட ஓவர்களில் களமிறங்கும் தோனி ஓரிரு பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு வருகிறார்.

- Advertisement -

கிரிக்கெட்டும் சாப்பாடும்:

அந்த வாய்ப்பில் சமீபத்திய வருடங்களில் அவரால் வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்ய முடியவில்லை. எனவே அவருடைய ஆட்டத்தைப் பார்ப்பதற்காகவும் சிஎஸ்கே அணியின் நலனுக்காகவும் தோனி கொஞ்சம் முன்னதாக பேட்டிங் செய்ய வேண்டும் என்று பலரும் கேட்டுக்கொண்டனர். இருப்பினும் வயது காரணமாக அதைச் செய்ய முடியாமல் தடுமாறும் தோனி ஐபிஎல் 2026 தொடருடன் ஓய்வு பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

அதனாலேயே தோனியின் இடத்தில் விக்கெட் கீப்பராக விளையாட சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் அணியிலிருந்து சிஎஸ்கே டிரேடிங் முறையில் வாங்கியுள்ளது. இந்நிலையில் சாப்பாட்டில் இனிப்பு பதார்த்தங்கள் போல கிரிக்கெட்டில் தற்போது தம்முடைய நிலைமை இருப்பதாக தோனி கலகலப்பாக தெரிவித்துள்ளார். அதனால் தம்மால் அதிகமாக விளையாட முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

தோனியின் தத்துவம்:

அதே சமயம் சரியான நேரத்தில் தம்முடைய ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அது வெற்றி எனும் இனிப்பாக அமையும் என்றும் தோனி கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு அவர் கொடுத்த பதில் பின்வருமாறு. “தற்சமயத்தில் நான் இனிப்பாக இருக்கிறேன். ஆட்டத்தை துவங்கியுள்ள மற்றவர்கள் முதன்மை பாடமாக இருக்கிறார்கள்”

இதையும் படிங்க: என் இதயத்தை உடைத்த அவங்களே நியாயமான காரணத்தை சொன்னாங்க.. கழற்றி விடப்பட்டது பற்றி ஜிதேஷ் 

“என்னுடைய வேலை ஆட்டத்தின் பிற்பகுதியில் வந்து வலுவாக ஃபினிஷிங் செய்வதாகும். நீங்கள் இனிப்பை உங்களுடைய முதல் பாடமாக எடுத்துக் கொண்டால், உங்களுக்கு நீரிழிவு நோய் வரலாம். கிரிக்கெட்டும் சாப்பாடு போன்றது. அதற்கு சரியான டைமிங் தேவைப்படும். நீங்கள் உங்களுடைய பங்கை சரியான தருணத்தில் கொடுத்தால் அதனுடைய முடிவு இனிப்பாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement